ஆரோக்கியம் அழகு
புத்துணர்வு தரும் எளிய கருவிகள்
முகத்தில் உள்ள துவாரங்களைத் திறந்து அழுக்குகளை வெளியேற்ற ஸ்டீமர் பயன்படுகிறது. இந்த சிகிச்சை இல்லாமல், பேஷியல் முழுமையடையாது. ஸ்டீமரைப் பயன்படுத்தும் போது, முகத்தில் நாம் பூசும் மருந்துப்பொருட்கள் நன்றாக சருமத்துக்குள் ஊடுருவும். ஸ்டீமரை உபயோகித்து முடித்தபின்பு, லேசான ஸ்கிரப் மூலம் இறந்த செல்களை நீக்க வேண்டும்.
10 July 2022 7:00 AM ISTகுழந்தைகளுக்கு செய்ய வேண்டிய மருத்துவ பரிசோதனைகள்
ஊட்டச்சத்து குறைபாடு, டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்துவது ஆகிய காரணங்களால் குழந்தைகள் கண்ணாடி அணிவது அதிகரித்து வருகிறது. முன்கூட்டியே பரிசோதனை செய்வதன் மூலம், பாதிப்புகளைக் கண்டறிந்து கண் பார்வைக் குறைபாட்டைத் தடுக்க முடியும். எனவே வருடம் ஒரு முறை குழந்தைகளுக்கு கண் பரிசோதனை செய்வது அவசியம்.
3 July 2022 7:00 AM ISTநோய்களைக் கட்டுப்படுத்தும் யோகா
உடலில் ரத்த அழுத்த மாறுபாட்டால் ஏற்படும் பாதிப்புகளை முறையான யோகாசனப் பயிற்சிகள் மூலம் கட்டுப்படுத்தலாம். குறைந்த ரத்த அழுத்தத்தினைப் பச்சிமோத்தாசனம், அர்த்த மத்ஸ்யேந்திராசனம், பாத கோனாசனம், சேது பந்தாசனம், அர்த்த ஹலாசனம் போன்ற ஆசனங்கள் மூலம் கட்டுப்படுத்தலாம்.
3 July 2022 7:00 AM ISTகாம்பினேஷன் சருமத்துக்கான பராமரிப்பு முறைகள்
நெற்றி மற்றும் மூக்குப் பகுதிகள் பளபளப்பாக இருக்கும். கன்னம், தாடை பகுதிகள் வறண்டு காணப்படும். முகப்பருக்கள் அடிக்கடி உண்டாகும். மூக்கு, நெற்றி மற்றும் தாடைப் பகுதிகளில் உள்ள சருமத் துளைகள் பெரியதாக இருக்கும்.
3 July 2022 7:00 AM ISTஎடை அதிகரிப்பால் ஏற்படும் கணுக்கால் வலி
உடல் எடை அதிகரிப்பால் கணுக்கால் நரம்புகள், தசைகள் மற்றும் மூட்டுகள் அழுத்தப்படுவதால் ஏற்படும் வலி மற்றும் வீக்கமே ‘குதிவாதம்’ எனப்படுகிறது.
26 Jun 2022 7:00 AM IST'மேக்கப்' மூலம் ஆளுமையை வெளிப்படுத்தலாம்
கண்களுக்கு அடுத்து நாம் கவனம் செலுத்த வேண்டியது முகம்தான். லேசான மேக்கப் மட்டும் இருந்தாலே, முகத்தை அழகாக எடுத்துக் காட்டலாம். குறைவாக ஒப்பனை செய்யும் போது, முகம் பிரகாசமாக மட்டுமின்றி, தன்னம்பிக்கையுடனும் வெளிப்படும். இதில், கவனிக்க வேண்டிய விஷயம், நம் சரும நிறத்திற்கு ஏற்ற பவுண்டேஷனைத் தேர்வு செய்தல். இது முகத்தின் அழகை மெருகூட்டிக் காட்டும்.
26 Jun 2022 7:00 AM ISTஇளம்பெண்களை அதிகம் பாதிக்கும் 'டிரை ஐ சிண்ட்ரோம்'
கண்ணீரால் கண்களுக்குப் போதுமான உயவுத்தன்மையை வழங்க முடியாமல் போகும் நிலைக்கு ‘டிரை ஐ சிண்ட்ரோம்’ என்று பெயர். இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, கண்களுக்குத் தேவையான அளவு கண்ணீரை உற்பத்தி செய்ய முடியாது அல்லது கண்களின் ஈரப்பதத்தை பராமரிக்க முடியாத அளவிற்கு குறைவான அளவு கண்ணீர் உற்பத்தி ஆகும்.
26 Jun 2022 7:00 AM ISTஅழகை அதிகரிக்கும் தாமரை எண்ணெய்
தாமரை எண்ணெய்யை முகத்திற்கு மட்டுமின்றி கை, கால்களுக்கும் பூசிக் கொள்ளலாம். இது தோலின் மேல் படியும் இறந்த செல்களை அகற்றும். சரும வறட்சியில் இருந்து காத்து, தோலுக்குத் தேவையான ஈரப்பதத்தை மீட்டுத் தரும். இந்த எண்ணெய்யை நகங்களின் மீது தடவி வந்தால் அவை உறுதியாகும்.
26 Jun 2022 7:00 AM ISTமாதவிடாய் நாட்களில் உடற்பயிற்சி
உடலில் உண்டாகும் ஹார்மோன் மாற்றங்கள், மாதவிடாய் காலங்களில் சோர்வு உணர்வுகளை அதிகரிக்கும். பெண்களின் நலன் குறித்த ஆய்வு ஒன்றின் முடிவு ‘உடல் செயல்பாடு’ ஆற்றல் அளவை அதிகரித்து சோர்வைத் தடுக்கும் என்கிறது.
26 Jun 2022 7:00 AM ISTபொன்னிற மேனி அழகுக்கு சந்தனம்
வெயிலில் சென்று வந்த பிறகு சருமத்தில் எரிச்சல் இருக்கும். அதைப் போக்க சந்தனம் சிறந்த தீர்வாகும். முகத்தை குளிர்ந்த நீரில் கழுவி, சந்தனத்தைத் தடவினால் எரிச்சல் உடனே நீங்கும்.
19 Jun 2022 7:00 AM IST'ஷேப்வேர்' பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்
ஷேப்வேர் அணியும் பெண்கள் அசவுகரியம் காரணமாக கழிவறைகளை பயன்படுத்தாமலேயே இருப்பார்கள். இதனால், அவர்களுக்கு சிறுநீர் கோளாறு மற்றும் சிறுநீர் தொற்று ஏற்படும் அபாயம் உருவாகலாம். இது சிறுநீர்ப்பையில் அழுத்தத்தை அதிகரித்து, பாதிப்பை ஏற்படுத்தும்.
19 Jun 2022 7:00 AM ISTமண்ணில் புதைத்து வைத்திருந்த 650 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல்-3 பேர் கைது
பாழடைந்த வீட்டில் அருகில் மண்ணுக்குள் புதைத்து வைத்திருந்த 650 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
18 Jun 2022 11:03 PM IST