குழந்தைகளுக்கு செய்ய வேண்டிய மருத்துவ பரிசோதனைகள்


தினத்தந்தி 3 July 2022 7:00 AM IST (Updated: 3 July 2022 7:01 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டச்சத்து குறைபாடு, டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்துவது ஆகிய காரணங்களால் குழந்தைகள் கண்ணாடி அணிவது அதிகரித்து வருகிறது. முன்கூட்டியே பரிசோதனை செய்வதன் மூலம், பாதிப்புகளைக் கண்டறிந்து கண் பார்வைக் குறைபாட்டைத் தடுக்க முடியும். எனவே வருடம் ஒரு முறை குழந்தைகளுக்கு கண் பரிசோதனை செய்வது அவசியம்.

குழந்தைகளின் உடல்நலத்தில் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால் மட்டுமே மருத்துவரிடம் சிகிச்சைக்காக கூட்டிச்செல்வது வழக்கம். அதே சமயம் 'வருமுன் காப்போம்' என்ற அடிப்படையில், வருடத்துக்கு ஒரு முறை குழந்தைகளுக்கு சில மருத்துவ பரிசோதனைகளை செய்ய வேண்டியது முக்கியம். இதன்மூலம் ஆரம்ப நிலையில் இருக்கும் பாதிப்புகளை கண்டறிந்து, அவை தீவிரமாகாமல் தடுக்க முடியும்.

கண் பரிசோதனை:

ஊட்டச்சத்து குறைபாடு, டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்துவது ஆகிய காரணங்களால் குழந்தைகள் கண்ணாடி அணிவது அதிகரித்து வருகிறது. முன்கூட்டியே பரிசோதனை செய்வதன் மூலம், பாதிப்புகளைக் கண்டறிந்து கண் பார்வைக் குறைபாட்டைத் தடுக்க முடியும். எனவே வருடம் ஒரு முறை குழந்தைகளுக்கு கண் பரிசோதனை செய்வது அவசியம்.

பல் பரிசோதனை:

சொத்தைப்பல், ஈறுகளில் பிரச்சினை போன்ற பாதிப்புகள் ஏற்படும்போதுதான் பலரும் பல் மருத்துவரைச் சந்திக்கிறார்கள். குழந்தைகள் அதிகப்படியான இனிப்புகள், சாக்லேட் வகைகள், ஐஸ்கிரீம் போன்றவற்றை சாப்பிடுவதால் பற்களில் கிருமிகளின் தாக்கம் இருக்கலாம். இவை பாதிப்பை ஏற்படுத்தும்வரை காத்திராமல், முன்கூட்டியே பல் மருத்துவரைச் சந்தித்து பரிசோதனைகள் மேற்கொள்வதன் மூலம் பற்களின் ஆரோக்கியம் காக்கலாம்.

உடல் எடை:

மோசமான உணவுப் பழக்கம், உடல் உழைப்பு இல்லாதது, உடற்பயிற்சி செய்யாதது போன்றவற்றால் குழந்தைகளின் எடை அதிகரித்து வருகிறது. குழந்தைகளின் வளர்ச்சி சீராக உள்ளதா? உடல் எடை சரியாக உள்ளதா? எனப் பரிசோதிக்க பொதுமருத்துவரைச் சந்திப்பது நல்லது.

மேலும் குழந்தைகளிடம் குறட்டை, காது நோய்த்தொற்றுகள், டான்சிலிடிஸ், சைனஸ் போன்றவற்றின் அறிகுறிகள் இருந்தால் காது, மூக்கு, தொண்டை நிபுணரிடம் அழைத்துச்சென்று பரிசோதனை செய்வதன் மூலம், ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து தக்க சிகிச்சைகளின் மூலம் அவற்றை குணப்படுத்த முடியும்.

தடுப்பூசி:

குழந்தைகள் பிறந்தது முதல் 1 வருடம் வரையும், அதற்கு பிறகு 2 முதல் 12 வருடங்கள் வரையும் தடுப்பூசிகள் போட வேண்டும். இதற்கான தடுப்பூசி அட்டவணையை மருத்துவரிடம் பெற்று, உரிய இடைவெளியில் கால தாமதம் இல்லாமல் தடுப்பூசி போடுவது பல நோய்களைத் தடுக்க உதவும்.


Next Story