எங்களைப் பற்றி

எங்களைப் பற்றி

1942ம் ஆண்டு நவம்பர் 1-ந் தேதி அமரர் சி.பா. ஆதித்தனார் அவர்களால் முதன் முதலாக மதுரை மாநகரில் தினத்தந்தி தொடங்கப்பட்டது. அன்று முதல், தமிழகம் முழுவதும் தமிழ் வாசகர்களிடையே விரைவாக வளர்ச்சி பெற்றது. இந்தியாவின் அரசியல், சமூக, பொருளாதார மாற்றங்களை பொதுமக்களுக்கு தெளிவாக எடுத்துச் சொல்வதே தினத்தந்தியின் நோக்கமாக இருந்து வருகிறது. பல நாடுகளில் செய்தியாளர்கள் நியமிக்கப்பட்டு உலகச் செய்திகள் தமிழில் வழங்கப்படுகின்றன.
பாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் அவர்களின் தலைமையில் தினத்தந்தி மேலும் விரிவடைந்து சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், திருநெல்வேலி உள்ளிட்ட பல நகரங்களில் வெளியிடப்பட்டது. www.dailythanthi.com என்ற இணையதளம் 1999 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு செய்திகளை கொண்டு சேர்க்கிறது. உண்மையான, நேர்மையான செய்திகளை வழங்குவதே தினத்தந்தியின் முக்கிய குறிக்கோளாகும்.
Daily Thanthi
www.dailythanthi.com