மாதவிடாய் நாட்களில் உடற்பயிற்சி


மாதவிடாய் நாட்களில் உடற்பயிற்சி
x
தினத்தந்தி 26 Jun 2022 7:00 AM IST (Updated: 26 Jun 2022 7:00 AM IST)
t-max-icont-min-icon

உடலில் உண்டாகும் ஹார்மோன் மாற்றங்கள், மாதவிடாய் காலங்களில் சோர்வு உணர்வுகளை அதிகரிக்கும். பெண்களின் நலன் குறித்த ஆய்வு ஒன்றின் முடிவு ‘உடல் செயல்பாடு’ ஆற்றல் அளவை அதிகரித்து சோர்வைத் தடுக்கும் என்கிறது.

மெரிக்க மகப்பேறியல் மருத்துவக் கல்லூரி மருத்துவர்களின் கூற்றுப்படி, உடற்பயிற்சியானது மன அழுத்தத்தைக் குறைக்க உதவும். அதிலும் மாதவிடாய் நாட்களில் மோசமான மனநிலையை சந்தித்துக் கொண்டிருக்கும் பெண்கள், உடற்பயிற்சி செய்வதால் மனநலன் மேம்படும் என்கிறார்கள்.

உடலில் உண்டாகும் ஹார்மோன் மாற்றங்கள், மாதவிடாய் காலங்களில் சோர்வு உணர்வுகளை அதிகரிக்கும். பெண்களின் நலன் குறித்த ஆய்வு ஒன்றின் முடிவு 'உடல் செயல்பாடு' ஆற்றல் அளவை அதிகரித்து சோர்வைத் தடுக்கும் என்கிறது.

இது குறித்து 2018-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் வாரத்திற்கு 3 நாட்களுக்கு, 30 நிமிடங்கள் வீதம், தொடர்ந்து 8 வாரங்கள் உடற்பயிற்சி செய்தவர்களுக்கு மாதவிடாய் வலி குறைவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. மாதவிடாய் காலத்திலும், அதற்கு முன்பும் உடற்பயிற்சி செய்வது வலி மற்றும் சோர்வுக்கான அறிகுறிகளைக் குறைக்கும் என்பது இந்த ஆய்வில் தெரிந்தது.

இதற்காக கடுமையான உடற்பயிற்சிகளை நீங்கள் செய்ய வேண்டியதில்லை. ஸ்ட்ரெச்சிங் மற்றும் யோகா போன்றவை உங்கள் பதற்றத்தைக் குறைத்து, ரத்த ஓட்டத்தை மேம்படுத்தலாம். இதனால் மாதவிடாய் நாட்களில் மனஅழுத்தம் இல்லாமல் மகிழ்ச்சியாக இருக்கலாம். யோகா பயிற்சியில் ஈடுபடுவது சிறந்த தேர்வாகும்.

உடற்பயிற்சியின் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை:

உடலை நீரேற்றமாக வைத்துக்கொள்ளுங்கள். உடலில் நீரிழப்பு ஏற்பட்டால் மலச்சிக்கல் போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தும். தினசரி 8 டம்ளர் தண்ணீர் குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இது உடற்பயிற்சி செய்வதால் சோர்வு ஏற்படாமல் தடுக்கும். சிலர் மாதவிடாய் காலங்களில் அடிக்கடி சிறுநீர் கழிப்பதைத் தவிர்ப்பதற்காக, குறைந்த அளவு தண்ணீர் குடிப்பார்கள். இது நீரிழப்பை உண்டாக்கி, தசைப்பிடிப்பையும் அதிகரிக்கும்.

2021-ம் ஆண்டு மேற்கொண்ட ஆய்வின் முடிவில், அதிக தண்ணீர் குடிப்பவர்களுக்கு மாதவிடாய் தொடங்கிய முதல் மூன்று நாட்களில் ஏற்படும் கடுமையான வலி குறைவதாக கண்டறிந்துள்ளனர்.

மாதவிடாய் காலத்தில் உடற்பயிற்சி செய்யும்போது உதிரப்போக்கு அதிகரிப்பது போன்ற உணர்வு உண்டாகலாம். உடற்பயிற்சி செய்வது, கருப்பையில் இருக்கும் ரத்தம் வேகமாக வெளியேற உதவும்.

மாதவிடாய் நாட்களில் மிதமான உடற்பயிற்சி செய்வதே நல்லது. தீவிரமாக உடற்பயிற்சி செய்வதால் ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சினை உண்டாகும். இத்தகைய அறிகுறியைக் கண்டால் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம்.


Next Story