சிலருக்கு அரசாங்க காரியங்களில் அனு கூலம் கிடைக்காது. புதிய பதவியை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு, அது தாமதமாகலாம். புதிய வாகனம் வாங்கும் எண்ணத்தை சற்றே தள்ளிப்போடுங்கள். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள். உணவுக் கட்டுப்பாடு மிகவும் அவசியம். கணவன் - மனைவி உறவு சுமுகமாகும். இந்த வாரம் புதன்கிழமை, பெருமாளுக்கு துளசி மாலை சூட்டி வழிபாடு செய்யுங்கள்.