கடகம் - வார ராசிபலன்

Update: 2024-05-09 09:58 GMT

05.05.2024 முதல் 11.5.2024 வரை

கடுமையான வாக்குவாதங்கள், வீண் சண்டைகள் தவிர்ப்பதால் உங்கள் மனஅமைதிக்கு பங்கம் இல்லை. சிலர் ஏராளமான பணம் சம்பாதிப்பீர்கள். ஆனால் அதை சரியான வகையில் நிர்வகிக்காவிட்டால், அது ஆற்றில் கரைத்த பெருங்காயம் போல் ஆகும். செய்தொழிலில் சிலருக்கு நிலையில்லாத நிலை ஏற்படும். சற்று கவனமுடன் செயல்பட்டால் தொழில் பாதிப்பு ஏற்படாது. சிலருக்கு ரியல் எஸ்டேட் வகையில் சிறந்த லாபம் உண்டு. அதே சமயம் பிள்ளைகள் வழியில் செலவுகளும் உண்டு. சற்று இறுக்கிப்பிடித்து செலவு செய்யுங்கள். பெண்கள் அசையா சொத்துக்களை தங்கள் பெயரில் வாங்குவீர்கள்.

மேலும் செய்திகள்