முன்னெச்சரிக்கையாக செயல்படும் கடக ராசி அன்பர்களே!
புதன் காலை 10.48 மணி முதல் வியாழக்கிழமை வரை சந்திராஷ்டமம் உள்ளதால், அவ்வப்போது சிறுசிறு தடங்கல்களை சந்திக்க நேரிடும். பணவரவு சிறு தாமதத்திற்குப் பின் வந்துசேரும். உத்தியோகஸ்தர்களில் சிலருக்கு பொறுப்புகள் அதிகரிக்கலாம். அவசரப் பணிக்காக வெளியூர் செல்லும் நிலை ஏற்படும். பதிவேடுகளில் கவனம் தேவை.
சொந்தத் தொழில் செய்பவர்கள், வேலைப்பளுவால் ஓய்வின்றி உழைக்க வேண்டியதிருக்கும். புதிய வாடிக்கையாளர்களால் தொழில் முன்னேற்றம் உண்டு. கூட்டுத்தொழிலில் பணவரவு அதிகரிக்கும். மூலப்பொருட்களை வாங்கி சேமிப்பீர்கள். குடும்பம் நன்றாக நடைபெறும். சுபகாரியம் சிறிய தடைக்குப் பின் திட்டமிட்டபடி நடைபெறும். கலைஞர்கள், முயற்சியின் மூலம் கிடைத்த வாய்ப்புகளில் பரபரப்பாகப் பணியாற்றுவர். பேச்சில் கவனம் தேவை.
சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் சனிக்கிழமை சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வணங்குங்கள்.