6.10.2023 முதல் 12.10.2023 வரை
வாழ்க்கையை ரசித்து வாழும் கடக ராசி அன்பர்களே!
திட்டமிட்டபடி காரியங்கள் நடைபெறும். வழக்கு விவகாரங்களில் அனுகூலமான திருப்பங்களைக் காணமுடியும். மனதில் நிம்மதியும், உற்சாகமும் குடிகொள்ளும். பணம் சம்பந்தமான விஷயங்கள் சாதகமாகும். உத்தியோகஸ்தர்கள் பொறுப்புகளில் கவனமாக இல்லாவிட்டால் பிரச்சினைகளை சந்திக்க நேரும். கொடுக்கல்- வாங்கலில் நிதானம் தேவை. வீண் பேச்சுகளைத் தவிர்ப்பது அவசியம்.
சொந்தத் தொழில் செய்பவர்கள் வியாபாரத்தில் ஏற்றம் காண்பர். தள்ளிப் போட்ட காரியம் ஒன்றை உடனே செய்து முடிக்கும் சந்தர்ப்பம் உருவாகும். கூட்டுத்தொழிலில் கூட்டாளிகளின் ஆலோசனையைக் கேட்டு செயல்களில் இறங்க வேண்டிய சூழ்நிலை உருவாகலாம். குடும்பத்தில் அவ்வப்போது சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படும். பங்குச்சந்தை வியாபாரிகள் லாபம் பெற வாய்ப்புண்டு.
சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் புதன்கிழமை பெருமாள் சன்னிதியில் துளசி மாலை சூட்டி வழிபடுங்கள்.