ஆன்மிகத்தில் பற்று கொண்ட கடக ராசி அன்பர்களே!
உத்தியோகத்தில் உள்ளவர்கள், தங்கள் பொறுப்புகளில் அதிக கவனமாக இருப்பது அவசியம். நீங்கள் செய்யும் சிறிய தவறும், உயர் அதிகாரிகளுக்கு மிகப் பெரியதாகத் தோன்றும். சொந்தத் தொழில் செய்பவர்கள், பழைய வாடிக்கையாளர்களின் மூலம் புதிய நபரின் அறிமுகத்தைப் பெற்று, போதுமான வருவாய் ஈட்டுவா்.
கூட்டு வியாபாரத்தில், தொழில் போட்டிகளால் பின்னடைவை சந்திக்கும்படி ஆகலாம். ஆனாலும் கூட்டாளிகளுடன் கலந்து பேசி அந்த பிரச்சினையில் இருந்து வெளிவர தீவிரமாக முயற்சிப்பீர்கள். குடும்பத்தில் சிறுசிறு கடன் பிரச்சினை தலைதூக்கும். பெண்கள் தங்கள் சிறு சேமிப்பால் அதனை சமாளிப்பார்கள். இல்லத்தில் சுப காரியம் நடத்துவதற்கான முன்னேற்பாட்டை செய்வீர்கள். கலைஞர்கள், சகக்கலைஞர்கள் மூலம் புதிய வாய்ப்புகளைப் பெறுவர்.
சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் வியாழக்கிழமை ஹயக்ரீவருக்கு மலர் மாலை சூட்டி வழிபட்டு வாருங்கள்.