நிர்வாகத் திறமை மிகுந்த கடக ராசி அன்பர்களே!
செவ்வாய்க்கிழமை மாலை 6.52 மணி முதல் வியாழக்கிழமை வரை சந்திராஷ்டமம் உள்ளதால், பணவரவுகள் இருந்தாலும் செலவுகள் சிந்திக்க வைக்கும். எதையும் நிதானித்து செய்தால், சில பிரச்சினைகள் அகலும். உத்தியோகத்தில் உயர்வான போக்கு காணப்படும். ஒதுக்கி வைத்த செயல் ஒன்றை உற்சாகத்துடன் செய்து முடிப்பீர்கள்.
சொந்தத் தொழில் செய்பவர்கள், அதிக வேலைப்பளுவால் ஓய்வின்றி பணியாற்றுவார்கள். கூட்டுத் தொழிலில் லாபத்தைக் குவிக்க பங்குதாரர்களிடம் ஆலோசனை செய்வீர்கள். ஏற்ற இறக்கமாக இருந்த வியாபாரத்தை உயர்த்திட மற்றவர்களின் அனுபவம் பயன்படும். குடும்பத்தில் குதூகலம் இருந்தாலும், குதர்க்கமான பேச்சுகளைக் குறைத்துக் கொள்வது அவசியம். கலைஞர்கள், புதிய ஒப்பந்தங்களினால் உயர்வைப் பெறுவார்கள். பங்குச்சந்தை லாபம் சுமாராகவே காணப்படும்.
சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் செவ்வாய்க்கிழமை விநாயகருக்கு அருகம்புல் மாலை சூட்டுங்கள்.