29.9.2023 முதல் 5.10.2023 வரை
இனிக்க பேசி இதயம் கவரும் கடக ராசி அன்பர்களே!
பல காரியங்களில் தீவிரமாக முயற்சி செய்தாலும், சிலவற்றில் மட்டுமே எதிர்பார்க்கும் நன்மைகளை அடையும் வாரம் இது. என்றாலும் நண்பர்களும், உறவினர்களும், நீங்கள் எதிர்பார்க்கும் சமயங்களில் கண்களில் தென்பட மாட்டார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பொறுப்புகளில் அதிகக்கவனம் செலுத்தாவிட்டால், உயரதிகாரிகளின் கோபப் பார்வைக்கு ஆளாக நேரிடும். சொந்தத்தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் மூலம் வேலைப்பளு அதிகரிக்கும். மூலப் பொருட்களின் தட்டுப்பாட்டால் வேலையில் தொய்வு ஏற்படும். கூட்டுத் தொழில் சுமாராக நடைபெற்றாலும் வழக்கமான லாபம் குறையாது. கணக்குகளில் இருந்த குழப்பத்தைக் கூடிப் பேசி சரி செய்வீர்கள். குடும்பத்தில் பழைய கடன் தொல்லை இருக்கும். கலைஞர்கள், புதிய ஒப்பந்தங்களைப் பெற தீவிரமாக முயற்சிப்பர்.
சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் வெள்ளிக்கிழமை துர்க்கைக்கு செவ்வரளி மலர் மாலை சூட்டுங்கள்.