முன்னேற்றம் பெற நேர்மையாக பாடுபடும் கடக ராசி அன்பர்களே!
வருமானத்தை அதிகப்படுத்த புதிய முயற்சிகளைப் பற்றி சிந்திப்பீர்கள். அவசியமான காரியம் ஒன்றைச் சாதிப்பதற்காக முக்கிய நபரைச் சந்திப்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் கோரிக்கைகள் நிறைவேறும் சூழல் உருவாகும். அவசியமான வேலையொன்றை உடனே செய்து முடிக்க வேண்டியிருக்கலாம். எதிர்பார்த்த பண வரவுகள் கிடைத்து, பாதியில் விட்டிருந்த பணியைத் தொடங்குவீர்கள். சொந்தத் தொழில் செய்பவர்கள் வாடிக்கையாளர்களுக்கு தேவையான பொருளை சரியான நேரத்தில் செய்து கொடுத்து நல்ல பெயர் பெறுவார்கள். கூட்டுத்தொழிலில் பழைய பொருட்களை மாற்றிக் கொள்வீர்கள். தொழில் பங்குதாரர்களுடன் ஆலோசனை செய்வது பிரச்சினையை தவிர்க்கும். குடும்பத்தில் ஏற்படும் நெருக்கடிகளை சமாளிப்பீர்கள். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தம் பெறுவா்.
சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் சனிக்கிழமை சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபமிட்டு வணங்குங்கள்.