சிந்தனை வளம் நிறைந்த கடக ராசி அன்பர்களே!
எடுக்கும் முயற்சிகள் சிலவற்றில் வெற்றி காண்பீர்கள். என்றாலும் வெள்ளிக்கிழமை பகல் 1.12 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால், சில காரியங்களில் எதிர்பார்த்த முன்னேற்றம், பண வரவு தாமதமாகும். உத்தியோகத்தில் சிலருக்கு பொறுப்புகள் அதிகமாகலாம். தள்ளி வைத்த வேலையை உயரதிகாரிகளின் விருப்பப்படி உடனே செய்ய நேரிடும். சொந்தத் தொழிலில் முன்னேற்றம் காணப்படும். புதிய வாடிக்கையாளர் வரவு திருப்தி அளிக்கும்.
கூட்டுத் தொழில் முயற்சியில் எதிர்பார்த்த லாபம் இருக்கும். போட்டியாளர்களின் கரங்கள் ஓங்கியிருக்கும். பணியாளர்களை அவ்வப்போது கண் காணித்து வருவது நல்லது. குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் இருந்தாலும், அவற்றை சமாளித்து விடுவீர்கள். கலைஞர்கள், சகக் கலைஞர்கள் மூலம் புதிய ஒப்பந்தங்களைப் பெற முயற்சிப்பீர்கள்.
சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் திங்கட்கிழமை பராசக்திக்கு வெண்மையான மலா்களால் மாலை சூட்டுங்கள்.