உறுதியான மனம் படைத்த கடக ராசி அன்பர்களே!
பல செயல்களில் முயற்சியோடு ஈடுபட்டாலும், சிலவற்றில் முன்னேற்றமும், மற்றவைகளில் தொய்வும் காணப்படும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பொறுப்பில் உள்ள பதிவேடு களில் கவனமாக இருங்கள். சிறிய தவறும் உயர் அதிகாரிகளுக்கு பெரிதாகத் தோன்றும்.
சொந்தத் தொழில் நன்றாக நடைபெற்றாலும், சிறு சிறு தவறுகள் ஏற்படத்தான் செய்யும். புதிய வாடிக்கையாளரால் தொழில் முன்னேற்றமும், பொருள் வரவும் உண்டு. கூட்டுத் தொழிலில் வழக்கமான லாபம் குறையாது. நிலுவையில் உள்ள பணத்தை வசூலிக்க முயற்சிகளை மேற்கொள்வீர்கள். குடும்பம் நன்றாக நடைபெற்றாலும், சிறு சிறு பிரச்சினைகளும் தோன்றி மறையும். கணவன்-மனைவி ஒற்றுமை பலப்படும். கலைஞர்கள் பணிகளில் சுறுசுறுப்பு காட்டுவர். பங்குச்சந்தை சுமாராக நடைபெறும்.
சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை விநாயகருக்கு அருகம்புல் மாலை சூட்டி வணங்குங்கள்.