13-10-2023 முதல் 19-10-2023 வரை
எழுத்துக்கலையில் வல்லமை மிகுந்த கடக ராசி அன்பர்களே!
நீண்ட காலமாக பிரிந்திருந்த நண்பரை சந்திக்கும் வாய்ப்பு உண்டாகும். பணப் பரிவர்த்தனைகளை கவனத்துடன் செய்யுங்கள். சில விஷயங்களில் கூட்டு முயற்சி பலன் தரும். பயணங்களின் போது கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் பதவி உயர்வு சம்பந்தமாக செய்த முயற்சிகள் பயனளிக்கக் கூடும். சக நண்பர்களின் வேலையையும் சேர்த்து செய்ய நேரிடலாம். வீண் பேச்சுகளைத் தவிர்ப்பது அவசியம். சொந்தத் தொழிலில் உள்ளவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் ஏற்படலாம். பணவரவு அதிகமாகும். வாடிக்கையாளர்களின் திருப்தி மகிழ்ச்சி தருவதாக அமையும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் வியாபாரத்தில் வருமானத்தைப் பெருக்க கூட்டாளிகளுடன் ஆலோசிப்பீர்கள். குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை காணப்படும். கலைஞர்கள் பெரிய நிறுவனத்தில் இருந்து வாய்ப்புகளைப் பெற முயற்சிப்பார்கள்.
சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் திங்கட்கிழமை அம்மனுக்கு வெண்மையான மலர் சூட்டி வணங்குங்கள்.