20-10-2023 முதல் 26-10-2023 வரை
உறுதியான உள்ளம் கொண்ட கடக ராசி அன்பர்களே!
உங்கள் காரியங்கள் யாவும் வெற்றிகரமாக நிறைவேறும். என்றாலும் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் சந்திராஷ்டமம் உள்ளதால் சிறு சிறு தடங்கல்கள் வரும். அரசாங்கத்தின் மூலம் சிறு லாபம் ஏற்படலாம். உத்தியோகத்தில் புதிய பதவி கிடைக்கும். சிலருக்கு சம்பள உயர்வும், விரும்பிய இடத்திற்கு மாறுதலும் வந்துசேரலாம். பணியில் கவனமாக இல்லாவிட்டால், உயர் அதிகாரிகளின் கோபப் பார்வைக்கு இலக்காக நேரிடும். சொந்தத் தொழில் நல்ல வருமானம் ஈட்டும். அவசரப் பணிகளை முடிக்க ஓய்வின்றி உழைப்பீர்கள். கூட்டுத்தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வியாபார முன்னேற்றம் குறித்து கூட்டாளிகளுடன் ஆலோசிப்பீர்கள். குடும்பத்தில் அவ்வப்போது சிறு சிறு பிரச்சினைகள் ஏற்படத்தான் செய்யும். கலைஞர்கள் புதிய வாய்ப்பு கிடைக்கப் பெற்று, மகிழ்வுடன் பணியாற்றுவர்.
சிறப்புப் பரிகாரம்:-இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை விநாயகருக்கு அருகம்புல் மாலை சூட்டி வழிபடுங்கள்.