கற்பனை மிகுந்த உள்ளம் கொண்ட கடக ராசி அன்பர்களே!
விருந்தினர் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். மறைமுகமான எதிர்ப்புகள் குறையும். மனதில் நினைத்திருந்த செயலை செய்து முடிப்பீர்கள். உத்தியோகஸ்தர்கள், வேலைப்பளுவால் அவதிப்பட நேரலாம். தள்ளி வைத்த பணி ஒன்றை, உடனடியாக செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகும். சக ஊழியர்களிடம் வீண் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது.
சொந்தத் தொழில் செய்பவர்கள், வாடிக்கையாளர் எதிர்பார்க்கும் நேரத்தில் பணிகளைச் செய்து கொடுக்க இயலாமல் போகலாம். கூட்டுத் தொழில் வியாபாரத்தில் ஏற்றத் தாழ்வுகள் காணப்படும். புதிய முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படும். பெண்களுக்கு ஆரோக்கிய குறை ஏற்பட்டு அகலும். கலைஞர்கள் பழைய ஒப்பந்தங்களிலேயே, தேவையான வருமானத்தைப் பெறுவர். பங்குச்சந்தையில் வருமானம் தாமதாகும்.
பரிகாரம்:- இந்த வாரம் புதன்கிழமை சுதர்சனருக்கு துளசி மாலை சூட்டி, நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள்.