உள்ளத்தில் உறுதி கொண்ட கடக ராசி அன்பர்களே!
எதையும் நிதானித்து செய்வதால், நன்மை அடைய முடியும். நல்ல நோக்கத்துடன் எடுக்கும் முடிவுகள் கூட, மற்றவர்களால் விமர்சிக்கப்படலாம். எழுத்துத் துறையில் இருப்போருக்கு புதிய வாய்ப்பு கிடைக்கும். அதை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு முன்னேற முயற்சிப்பீர்கள். சினிமாத் துறையில் இருப்பவர்கள், எதையும் கவனத்துடன் கையாள வேண்டிய காலகட்டம் இது. குடும்பத்தில் உங்களது இளைய சகோதர, சகோதரி களால் கவலை உண்டாகும். உடல் உஷ்ணம் சம்பந்தமான தொல்லையால் அவதிப்பட நேரலாம். அரசாங்கப் பதவி வகிப்பவர்கள் மற்றும் சொந்தத் தொழில் செய்பவர்கள், அதிக கவனத்துடன் செயல்படுவது நல்லது. பயணங்களில் பொருள் களவுபோகக் கூடும். கணவன் - மனைவி இடையே இதுவரை இருந்த பிரச்சினைகள் தீரும். கடன் வழக்குகளில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது அவசியம்.
பரிகாரம்:- இந்த வாரம் சனிக்கிழமை சனீஸ்வர பகவானுக்கு, நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள்.