கடகம் - வார பலன்கள்

Update: 2023-05-04 20:06 GMT

உழைப்புக்கு அஞ்சாத மனம் கொண்ட கடக ராசி அன்பர்களே!

முயற்சியுடன் காரியங்களில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். சில காரியங்களில் எதிர்பார்க்கும் திருப்தி இல்லாமல் போகக்கூடும். நண்பர்களின் உதவியோடு செயல்பட்டு முன்னேற்றம் அடைவீர்கள். வெளியூரில் இருந்து எதிர்பார்க்கும் தகவல் வந்து சேரலாம். உத்தியோகத்தில், விடுமுறையில் உள்ள சகப் பணியாளர்களின் வேலையையும் சேர்த்து செய்யும் நிலை ஏற்படும். சொந்தத் தொழிலில், பழைய வாடிக்கையாளர் மூலம் புதிய நபரின் அறிமுகமும், அவரால் தொழில் முன்னேற்றமும் உண்டாகும். கூட்டுத்தொழில் வியாபாரத்தில் புதிய கிளை தொடங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் இருந்த பழைய கடன்கள் தீரும். பெண்களுக்கு சிறு மருத்துவ உதவி தேவைப்படலாம். கலைஞர்களுக்கு, பழைய ஒப்பந்தங்களில் இருந்தே வருமானம் ஏற்படும். பங்குச்சந்தை வியாபாரம் லாபம் தரலாம்.

பரிகாரம்:- இந்த வாரம் சனிக்கிழமை சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபமிட்டு வணங்கி வாருங்கள்.

மேலும் செய்திகள்