திட்டமிட்டுச் செயலாற்றும் கடக ராசி அன்பர்களே!
நினைத்த காரியத்தை முடிக்க தீவிரமாக முயற்சிப்பீர்கள். திட்டமிட்ட வரவுகள் கைக்கு கிடைக்க கால தாமதமாகும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் பணியில் கவனமாக இருங்கள். இல்லாவிட்டால் உயர் அதிகாரியின் கோபப் பார்வைக்கு ஆளாக நேரிடும். வீண் பேச்சைக் குறைப்பது நல்லது. சக ஊழியர்களிடம் சுமுகமாக நடந்து கொள்ளுங்கள். சொந்தத் தொழில் செய்பவர்கள், ஓய்வில்லாமல் உழைக்க வேண்டி வரும். இருப்பினும் அதிகரிக்கும் பண வரவால் மகிழ்ச்சி கொள்வீர்கள். கூட்டுத் தொழில் செய்வோர், தொழில் போட்டியை சமாளிக்க கூட்டாளியின் அறிவுரையை கேட்டுச் செயலாற்றுங்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். தீராத கடன் இருந்தாலும், அதனால் பாதிப்பு வராது. கலைஞர்கள், தாங்கள் செய்யும் வேலையால் மகிழ்ச்சி அடைவார்கள். நண்பர்களின் யோசனை பங்குச்சந்தையில் லாபம் பெற உதவும்.
பரிகாரம்:- சனிக்கிழமை அன்று சனி பகவானுக்கு, நல்லெண்ணெய் தீபமிட்டு ஏற்றி வணங்குங்கள்.