கலைகளில் ஈடுபாடு கொண்ட கடக ராசி அன்பா்களே!
செய்யும் முயற்சிகளில் ஏற்படும் தடைகளை உடைத்து முன்னேறுவீர்கள். உத்தியோகத்தில் நீண்ட காலமாக நிறுத்தி வைத்திருந்த காரியமொன்றை உடனே செய்ய வேண்டிய அவசியம் ஏற்படும். சிலருக்கு எதிர்பார்த்த காரியங்கள் நடைபெற்று மகிழ்வளிக்கும்.
சொந்தத்தொழில் செய்பவர்கள் பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவார்கள். கூட்டுத்தொழிலில் லாபம் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் வெற்றிபெறும். வியாபாரத்தை விரிவாக்கும் முயற்சிகளை மேற்கொள்வீர்கள். பங்குச்சந்தை வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும். முதலீடுகளைப் பெருக்க முற்படுவீர்கள். கலைஞர்களுக்கு பிரபல நிறுவனத்தாரின் ஒப்பந்தம் மூலம் பணமும், புகழும் கிடைக்கும். குடும்பம் குழப்பமின்றி நடைபெறும். தொல்லை கொடுத்து வந்த சிறு சிறு கடன்களை தீர்த்து நிம்மதி அடைவீர்கள்.
பரிகாரம்:- சுதர்சனப் பெருமாளுக்கு புதன்கிழமை துளசிமாலை சூட்டி வழிபட்டால் புகழும், பொருளும் சேரும்.