கடகம் - வார பலன்கள்

Update: 2023-01-26 19:49 GMT

முன்யோசனையுடன் செயல்படும் கடக ராசி அன்பர்களே!

தீவிர முயற்சியுடன் செயல்கள் பலவற்றில் ஈடுபட்டு முன்னேறுவீர்கள். நிறைவு பெறாத காரியங்களைச் செய்து முடிக்க, தகுந்த நபரின் உதவியை நாடுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களில் சிலருக்கு அலுவலகத்திலேயே பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கக்கூடும்.

சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு அதிகப் பொறுப்புகளால், போராட்டமான நிலை ஏற்படலாம். காலை முதல் மாலை வரை பம்பரமாகச் சுழன்று பணிகளைக் கவனிப்பீர்கள். கூட்டுத்தொழில் வியாபாரத்தில் வங்கிகளில் எதிர்பார்த்த பணவரவு கிடைக்கலாம். கூடுதல் வியாபாரத்தினால் முன்னேற்றமும் அதிக லாபமும் கிடைக்கும். குடும்பத்தில் உள்ள பிரச்சினைகளைக் கூடிப்பேசி சுமுகமாக சரி செய்து கொள்வீர்கள். ஆரோக்கிய குறைவால் பெண்களின் உற்சாகம் குறையலாம். கலைஞர்கள், பெரிய நிறுவனங்களில் வாய்ப்பு பெற முயற்சிப்பார்கள்.

பரிகாரம்:- சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு, வெற்றிலை மாலை அணிவித்து வழிபட்டால் தடைகள் அகலும்.

மேலும் செய்திகள்