காரியங்களில் முயற்சியுடன் செயல்படும் கடக ராசி அன்பர்களே!
நீண்ட நாட்களாக நீடித்து வந்த பிரச்சினைகள் குறையக்கூடும். எதையும் சமாளிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். நீண்ட நாட்களாக சந்திக்க எண்ணிய ஒருவரை சந்திப்பீர்கள். அதன் மூலமாக சில பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். என்றாலும் அதற்கு, உங்களுடைய கோபத்தை குறைத்து, நிதானப் போக்கை கடைப்பிடிக்க வேண்டும். எலக்ட்ரானிக் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்கள் மிகுந்த கவனத்துடன் செயல்படுங்கள். குடும்பத்திற்குள் சிறுசிறு சச்சரவுகள் தோன்றினாலும், பெரிய அளவில் பிரச்சினைகள் இருக்காது. கணவன்- மனைவி இடையே கருத்துவேறுபாடு ஏற்படாமல் இருக்க, விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள். வெளிநாட்டு பயணம் தொடர்பாக ஒரு நல்ல முடிவு எடுக்கக்கூடிய வாய்ப்பு உருவாகும். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக் கொள்ளுங்கள். பிள்ளைகளால் உதிரி வருமானமும் உண்டு.
பரிகாரம்: அருகில் உள்ள அம்மன் ஆலயத்திற்குச் சென்று நெய் தீபம் ஏற்றினால், காரியத் தடை விலகும்.