கடகம் - வார பலன்கள்

Update: 2022-10-13 20:21 GMT

இந்த வாரம் செய்தொழிலில் சிறப்புகள் இருந்தாலும் தவிர்க்க முடியாத செலவுகளால் சஞ்சலப்பட நேரலாம். நண்பர்கள், உறவுகள், வேற்றுமொழி பேசும் நபர் மூலம் முன்னேற்றம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பணியில் நெருக்கடிகளைச் சந்திக்க நேரலாம். எதிர்பார்க்கும் உதவிகள் தள்ளிப்போகும். பிறரிடம் கடுமையாக நடந்து கொள்வதை தவிர்ப்பது நல்லது. சொந்தத் தொழிலில் கவனமாக இருந்தால் தான் ஆதாயம் பெறமுடியும். நிலுவைகள் வசூலாவதில் சிரமங்கள், அலைச்சல்கள் ஏற்படலாம். கூட்டுத்தொழில் சுமாராக நடைபெறும். குடும்பத்தில் தோன்றும் சிறுசிறு பிரச்சினைகளைச் சமாளிக்க வேண்டியிருக்கும். சுபகாரியங்கள் தள்ளிப் போகும். உறவு முறைகளில் சுமுகமாகவே பழக வேண்டும். தபால் மூலம் நல்ல தகவல் கிடைக்கலாம். இந்த வாரம் வளர்பிறை சஷ்டி அன்று முருகப்பெருமானுக்கு மலர்மாலை சூட்டி வழிபாடு செய்வது நற்பலன்களை அளிக்கும்.

மேலும் செய்திகள்