ஆசிய விளையாட்டு - பதக்க பட்டியலில் இந்தியா 4-வது இடம்

Update: 2023-10-04 01:04 GMT
Live Updates - Page 2
2023-10-04 08:49 GMT

கபடி:

ஆசிய விளையாட்டு போட்டியில் பெண்களுக்கான கபடி குரூப் ஏ பிரிவில் இந்தியா மற்றும் தாய்லாந்து அணிகள் மோதுகின்றன. ஆட்டத்தின் முதல் பாதியில் இந்திய அணி 32-9 என்ற புள்ளி கணக்கில் முன்னிலையில் உள்ளது.

2023-10-04 08:19 GMT

ஹாக்கி:

ஹாக்கி ஆண்கள் அரையிறுதி போட்டியில் இந்தியா - தென்கொரியா மோதி வருகின்றன. இதில் போட்டி தொடங்கியது முதலே இந்தியா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. தற்போதைய நிலவரப்படி 3-0 என்ற கோல் கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.

2023-10-04 08:11 GMT

பதக்க பட்டியலில் 4ம் இடத்தில் இந்தியா...!

ஆசிய விளையாட்டு தொடரில் 16 தங்கம், 27 வெள்ளி, 31 வெண்கலம் என மொத்தம் 74 பதக்கங்களுடன் இந்தியா பதக்க பட்டியலில் 4ம் இடத்தில் உள்ளது.

2023-10-04 08:09 GMT

குத்துச்சண்டை:

குத்துச்சண்டை பெண்கள் 66-75 கிலோ பிரிவில் இந்தியாவின் லவ்லினா வெள்ளிப்பதக்கம் வென்றார். இறுதிப்போட்டியில் இந்தியாவின் லவ்லினா சீன வீராங்கனையை எதிர்கொண்டார். இப்போட்டியில் 5-0 என்ற புள்ளி கணக்கில் இந்திய வீராங்கனையை வீழ்த்தி சீன வீராங்கனை தங்கப்பதக்கம் வென்றார். போட்டியில் தோல்வியடைந்த இந்திய வீராங்கனை லவ்லினாவுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்துள்ளது.

2023-10-04 08:06 GMT

பேட்மிண்டன்:

பேட்மிண்டன் ஆண்கள் இரட்டையர் ரவுண்ட் ஆப் 16 போட்டி 8ல் இந்தியா - இந்தோனேசியா மோதின. இப்போட்டியில் 24-22, 16-21, 21-12 என்ற நேர் செட்களில் இந்தோனேசியாவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது.

இந்திய அணியில் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிரங் சந்திரசேகர் ஷெட்டி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

இப்போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் பேட்மிண்டன் ஆண்கள் இரட்டையர் காலிறுதி சுற்றுக்கு இந்தியா முன்னேறியுள்ளது.

2023-10-04 07:49 GMT

ரோலர் ஸ்கேட்டிங்:

ரோலர் ஸ்கேட்டிங் கலப்பு இன்லைன் பிரிஸ்டைல் ஸ்கேடிங் சலமொன் பெர் இறுதிப்போட்டியில் இந்தியா கடைசி இடம் (7) பிடித்தது. இப்போட்டியில் சீனா தங்கப்பதக்கத்தையும், ஜப்பான் வெள்ளிப்பதக்கத்தையும், தாய்லாந்து வெண்கலப்பதக்கத்தையும் வென்றன.

2023-10-04 07:13 GMT

டைவிங்:

டைவிங் ஆண்கள் 10 மீட்டர் பிளாட்பாம் பிரிலிமினெரி சுற்றில் இந்தியாவின் சித்தார்த் பஞ்ரங் 11ம் இடம் பிடித்தார். 13 வீரர்கள் பங்கேற்ற இப்போட்டியில் 11ம் இடம் பிடித்த போதும் சித்தார்த் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.

2023-10-04 06:47 GMT

வில்வித்தை:

வில்வித்தை ரிகர்வி கலப்பு குழு காலிறுதி போட்டியில் இந்தியா - இந்தோனேசியா மோதின. பரபரப்பாக நடந்த இப்போட்டியில் ஷூட்அவுட் முறையில் 5-4 என்ற புள்ளி கணக்கில் இந்தியாவை வீழ்த்தி இந்தோனேசியா அபார வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்தோனேசியா அரையிறுதிக்கு முன்னேறியது.

காலிறுதியில் தோல்வியடைந்த இந்திய இணை அங்கிதா, அதனு தாஸ் இணை அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது.

2023-10-04 06:19 GMT

பதக்க பட்டியல்:

ஆசிய விளையாட்டு தொடரில் 16 தங்கம், 26 வெள்ளி, 31 வெண்கலம் என மொத்தம் 73 பதக்கங்களுடன் இந்தியா பதக்க பட்டியலில் 4ம் இடத்தில் உள்ளது.

2023-10-04 06:18 GMT

குத்துச்சண்டை:

குத்துச்சண்டை பெண்கள் 54-57 கிலோ பிரிவு அரையிறுதி போட்டியில் இந்தியா - சீன தைபே மோதின. இப்போட்டியில் 5-0 என்ற புள்ளி கணக்கில் இந்திய வீராங்கனை பர்வீனை வீழ்த்தி சீன தைபே வீராங்கனை அபார வெற்றிபெற்றார்.

அரையிறுதியில் தோல்வியடைந்தபோதும் இந்திய வீராங்கனை பர்வீனுக்கு வெண்கலப்பதக்கம் கிடைத்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்