மலேசிய ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் இந்திய வீரர் பிரனாய் வெற்றி

கனடாவின் பிரையன் யங்கை வீழ்த்தி பிரனாய் 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.;

Update:2025-01-09 08:58 IST

கோலாலம்பூர்,

மலேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், நேற்று நடந்த முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் - கனடாவின் பிரையன் யங் ஆகியோர் மோதினர்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய பிரனாய்,  21-12, 17-21, 21-15 என்ற செட் கணக்கில் கனடாவின் பிரையன் யங்கை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். அடுத்து பிரனாய், சீனாவின் ஷி பெங் லீயை சந்திக்கிறார். 

Tags:    

மேலும் செய்திகள்