'நம்பர் 1' செஸ் வீரர் கார்ல்செனின் வாழ்க்கையில் புதிய அத்தியாயம்.. காதலியை மணந்தார்
கார்ல்சென் தனது நீண்ட நாள் காதலியை நேற்று முன்தினம் திருமணம் செய்து கொண்டார்.;
ஆஸ்லோ,
உலகின் நம்பர் 1 செஸ் வீரரும், 5 முறை உலக சாம்பியனுமான கார்ல்சென் (34 வயது) சக நாட்டைச் சேர்ந்த 26 வயதான எலா விக்டோரியா மலோனை நீண்ட நாட்களாக காதலித்து வந்தார்.
இந்த நிலையில் கார்ல்சென் தனது காதலியை நேற்று முன்தினம் திருமணம் செய்து கொண்டார். உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டு புதுமண ஜோடியை வாழ்த்தினர்.
வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ள அவருக்கு செஸ் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.