உலக பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்: நாக் அவுட் சுற்றுக்கு இந்திய வீராங்கனை வைஷாலி தகுதி
11 சுற்றுகள் முடிவடைந்த நிலையில் வைஷாலி தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளார்.;
நியூயார்க்,
உலக பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் நாக் அவுட் சுற்றுக்கு இந்திய வீராங்கனை வைஷாலி தகுதி பெற்றுள்ளார். இவர் நாக் அவுட் சுற்றில் சீன வீராங்கனையுடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.
மேலும் 11 சுற்றுகள் முடிவடைந்த நிலையில் 9.5 புள்ளிகளுடன் இவர் தரவரிசையில் முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளார்.