மலேசிய ஓபன் பேட்மிண்டன்: சாத்விக்-சிராக் ஜோடி அரையிறுதியில் தோல்வி

ஆண்கள் இரட்டையர் பிரிவின் அரையிறுதி ஆட்டங்கள் நேற்று நடைபெற்றன.;

Update:2025-01-12 06:50 IST

கோலாலம்பூர்,

கோலாலம்பூர், மலேசியாவின் கோலாலம்பூரில் மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் அரையிறுதி ஆட்டங்கள் நேற்று நடைபெற்றன.

இதில் ஒரு ஆட்டத்தில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி- சிராக் செட்டி ஜோடி தென்கொரியாவின் கிம் வோன் ஹோ-சோ செங் ஜாய் ஜோடியை எதிர் கொண்டது.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் சாத்விக்-சிராக் கூட்டணி 10-21, 15-21 என்ற நேர்செட்டில் தோல்வி கண்டு வெளியேறியது. 

Tags:    

மேலும் செய்திகள்