ஆசிய விளையாட்டு - பதக்க பட்டியலில் இந்தியா 4-வது இடம்

Update:2023-10-04 06:34 IST
Live Updates - Page 3
2023-10-04 05:54 GMT

பதக்க பட்டியலில் 4ம் இடத்தில் இந்தியா...!

ஆசிய விளையாட்டு தொடரில் 16 தங்கம், 26 வெள்ளி, 30 வெண்கலம் என மொத்தம் 72 பதக்கங்களுடன் இந்தியா பதக்க பட்டியலில் 4ம் இடத்தில் உள்ளது.

2023-10-04 05:50 GMT

ஸ்குவாஷ்:

ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவு அரையிறுதி சுற்றில் இந்தியா - மலேசியா மோதின. மிகவும் பரபரப்பாக நடந்த இப்போட்டியில் 8-11, 11-2, 11-9 என்ற நேர் செட்களில் இந்தியாவின் அனாஹத் சிங் - அபய் சிங் இணையை வீழ்த்தி மலேசிய இணை அபார வெற்றிபெற்றது.

கடைசி வரை மிகவும் பரபரப்புடன் நடந்த இப்போட்டியில் கடைசி செட்டில் இந்திய இணை தோல்வியடைந்தது. அரையிறுதி போட்டியில் தோல்வியடைந்த போதும் இந்தியாவுக்கு வெண்கலப்பதக்கம் கிடைத்துள்ளது.  

2023-10-04 05:31 GMT

வாலிபால்:

வாலிபால் பெண்கள் கிளாசிபிகேஷன் பிரிவு ஜி போட்டி 16ல் இந்தியா - நேபாளம் மோதின. பரபரப்பாக நடந்த இப்போட்டியில் 3-1 என்ற செட் கணக்கில் நேபாளத்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது. 

2023-10-04 05:21 GMT

பேட்மிண்டன்:

பேட்மிண்டன் பெண்கள் இரட்டையர் ரவுண்ட் ஆப் 16 போட்டி 3ல் இந்தியா - தென்கொரியா மோதின. இப்போட்டியில் இந்தியாவின் காயத்ரி கோபி சந்த், டிரிசா ஜாலி இணையை 21-15, 18-21, 21-13 என்ற நேர் செட்களில் வீழ்த்தி தென்கொரிய இணை வெற்றிபெற்றது.

இப்போட்டியில் தோல்வியடைந்த இந்தியா காலிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது.

2023-10-04 05:01 GMT

ஸ்குவாஷ்:

ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் அரையிறுதி போட்டியில் இந்தியா - ஹாங்காங் மோதின. இப்போட்டியில் ஹாங்காங்கை 7-11, 11-7, 11-9 என்ற நேர் செட்களில் வீழ்த்தி இந்தியாவின் தீபிகா பல்லிக்கல், ஹரிந்தர் பால் சிங் இணை அபார வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னேறியுள்ளது.

இறுதிப்போட்டிக்கு முன்னேறியதால் இந்தியாவுக்கு குறைந்தபட்சம் வெள்ளிப்பதக்கம் உறுதியாகியுள்ளது.

2023-10-04 04:26 GMT

பேட்மிண்டன்:

பேட்மிண்டன் கலப்பு இரட்டையர் ரவுண்ட் ஆப் 16 போட்டி 2ல் இந்தியா - மலேசியா மோதின. இப்போட்டியில் 21-18, 21-18 என்ற நேர் செட்களில் இந்தியா இணை சாய் பிரதீக் கிருஷ்ண பிரசாத் - தனீஷாவை வீழ்த்தி மலேசியா இணை அபார வெற்றிபெற்றது.

இப்போட்டியில் தோல்வியடைந்த இந்தியா காலிறுதி சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது.

2023-10-04 03:51 GMT

மல்யுத்தம்:

மல்யுத்தம் ஆண்கள் கிரேகோ-ரேமன் 77 கிலோ 1/4 இறுதி போட்டி 29ல் இந்தியா - சீனா மோதின. இப்போட்டியில் 9-1 என்ற புள்ளி கணக்கில் இந்திய வீரர் விகாசை வீழ்த்தி சீன வீரர் அபார வெற்றிபெற்றார்.

2023-10-04 03:38 GMT

மல்யுத்தம்:

மல்யுத்தம் ஆண்கள் கிரேகோ-ரேமன் 60 கிலோ பிரிவி 1/8 இறுதி போட்டி 24ல் இந்தியா - ஈரான் மோதின. இப்போட்டியில் 7-1 என்ற புள்ளிக்கணக்கில் இந்திய வீரர் ஞானிந்தரை வீழ்த்தி ஈரான் வீரர் வெற்றிபெற்றார். இப்போட்டியில் தோல்வியடைந்த இந்திய வீரர் ஞானிந்தர் அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்தார்.

2023-10-04 03:27 GMT

பதக்க பட்டியலில் 4ம் இடத்தில் இந்தியா...!

ஆசிய விளையாட்டு தொடரில் 16 தங்கம், 26 வெள்ளி, 29 வெண்கலம் என மொத்தம் 71 பதக்கங்களுடன் இந்தியா பதக்க பட்டியலில் 4ம் இடத்தில் உள்ளது.

2023-10-04 03:22 GMT

வில்வித்தை:

வில்வித்தை காம்பவுண்ட் கலப்பு குழு பிரிவில் இந்தியா தங்கப்பதக்கம் வென்றுள்ளது. இறுதிப்போட்டியில் இந்தியா - தென்கொரியா மோதின. மிகவும் பரபரப்பாக நடந்த இப்போட்டியில் 159 - 158 என்ற புள்ளி கணக்கில் தென்கொரியாவை வீழ்த்தி இந்தியா திரில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்தியா தங்கப்பதக்கம் வென்றது.

தங்கப்பதக்கம் வென்ற இந்திய அணியில் ஜோதி, பிரவீன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்