மல்யுத்தம்:
மல்யுத்தம் ஆண்கள் கிரேகோ-ரேமன் 87 கிலோ பிரிவி 1/8 இறுதி போட்டி 21ல் இந்தியா - சீனா மோதின. இப்போட்டியில் 4-3 என்ற புள்ளிக்கணக்கில் சீன வீரரை வீழ்த்தி இந்திய வீரர் சுனில் குமார் அபார வெற்றிபெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் மல்யுத்தம் ஆண்கள் கிரேகோ-ரேமன் 87 கிலோ பிரிவி 1/4 இறுதி (அரையிறுதி) சுற்றுக்கு இந்திய வீரர் சுனில் குமார் முன்னேறினார்.
பேட்மிண்டன்:
பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் ரவுண்ட் ஆப் 16 போட்டி 4ல் இந்தியா - கஜகஸ்தான் மோதின. இப்போட்டியில் 21-12, 21-13 என்ற நேர் செட்களில் கஜகஸ்தான் வீரரை வீழ்த்தி இந்திய வீரர் பிரனோய் ஹசீனா சுனில் குமார் அபார வெற்றிபெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றுக்கு சுனில் குமார் முன்னேறினார்.
பேட்மிண்டன்:
பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் ரவுண்ட் ஆப் 16 போட்டி 4ல் இந்தியா - இந்தோனேசியா மோதின. இப்போட்டியில் 21-16, 21-16 என்ற நேர் செட்களில் இந்தோனேசிய வீராங்கனையை வீழ்த்தி இந்திய வீராங்கனை பிவி சிந்து அபார வெற்றிபெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் போட்டி காலிறுதி சுற்றுக்கு பிவி சிந்து முன்னேறினார்.
மல்யுத்தம்:
மல்யுத்தம் ஆண்கள் கிரேகோ-ரேமன் 67 கிலோ 1/8 இறுதி போட்டி 2ல் இந்தியா - உஸ்பெகிஸ்தான் மோதின. இப்போட்டியில் 5-3 என்ற புள்ளி கணக்கில் இந்திய வீரர் நீரஜை வீழ்த்தி கஜகஸ்தான் வீரர் மஹ்மூத் வெற்றிபெற்றார். 1/8 இறுதியில் தோல்வியடைந்த இந்திய வீரர் நீரஜ் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தார்.
வில்வித்தை:
வில்வித்தை காம்பவுண்ட் கலப்பு குழு அரையிறுதி போட்டியில் இந்தியா - கஜகஸ்தான் மோதின. இப்போட்டியில் 159-154 என்ற புள்ளி கஜகஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது. இந்திய அணியில் ஜோதி மற்றும் பிரவீன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
அரையிறுதியில் வெற்றிபெற்றதன் மூலம் வில்வித்தை காம்பவுண்ட் கலப்பு குழு இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னேறியுள்ளது. இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளதால் இந்தியாவுக்கு குறைந்தபட்சம் வெள்ளிப்பதக்கம் உறுதியாகியுள்ளது.
பதக்கப்பட்டியல்:
ஆசிய விளையாட்டு தொடரில் 15 தங்கம், 26 வெள்ளி, 29 வெண்கலம் என மொத்தம் 70 பதக்கங்களுடன் இந்தியா பதக்க பட்டியலில் 4ம் இடத்தில் உள்ளது.
தடகளம்:
தடகளம் 35 கிலோ மீட்டர் ரேஸ் வாக் கலப்பு குழு போட்டியில் இந்தியா வெண்கலப்பதக்கம் வென்றது. மனுஜா ராணி - பாபோ ராம் ஆகியோர் இடம்பெற்ற இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட இலக்கை 5 மணி நேரம் 51 நிமிடம் 14 விநாடிகளில் அடைந்து 3ம் இடம் பிடித்தது. இதன் மூலம் 35 கிலோ மீட்டர் ரேஸ் வாக் கலப்பு குழு போட்டியில் இந்தியா வெண்கலப்பதக்கம் வென்று சாதனை படைத்தது.
இப்போட்டியில் முதலிடம் பிடித்த சீனா தங்கப்பதக்கத்தையும், 2ம் இடம் பிடித்த ஜப்பான் வெள்ளிப்பதக்கத்தையும் வென்றது.
கபடி:
கபடி ஆண்கள் குழு பிரிவு ஏ - போட்டி 5ல் இந்தியா - தாய்லாந்து மோதின. இதில், 63-26 என்ற புள்ளி கணக்கில் தாய்லாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது.
வில்வித்தை:
வில்வித்தை காம்பவுண்ட் கலப்பு குழு காலிறுதி போட்டியில் இந்தியா - மலேசியா மோதின. பரபரப்பாக நடந்த இப்போட்டியில் 158-155 என்ற புள்ளி கணக்கில் மலேசியாவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது.
இந்த வெற்றியின் மூலம் வில்வித்தை காம்பவுண்ட் கலப்பு குழு அரையிறுதி இந்தியா முன்னேறியுள்ளது. இந்திய அணியில் பிரவீன், ஜோதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
பதக்க பட்டியல்:
ஆசிய விளையாட்டு தொடரில் 15 தங்கம், 26 வெள்ளி, 28 வெண்கலம் என மொத்தம் 69 பதக்கங்களுடன் இந்தியா பதக்க பட்டியலில் 4ம் இடத்தில் உள்ளது.