இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்
இன்று சுபமுகூர்த்த தினம். பிரதோஷம், நந்திபெருமான் வழிபாடு நன்று.
இன்றைய பஞ்சாங்கம் :
சோபகிருது ஆண்டு, கார்த்திகை-24 ( ஞாயிற்றுக்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: துவாதசி இன்று காலை 06.16 மணி வரை. பிறகு திரியோதசி
நட்சத்திரம்: சுவாதி காலை 11.26 மணி வரை. பிறகு விசாகம்
யோகம்: சித்த-மரணயோகம்
ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை
எமகண்டம்: மதியம் 12 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 7.45 மணி முதல் 8.45 மணி வரை மற்றும் மாலை 3.15 மணி முதல் 4.15 மணி வரை
இன்றைய முக்கிய நிகழ்வுகள் :
இன்று சுபமுகூர்த்த தினம். பிரதோஷம், நந்திபெருமான் வழிபாடு நன்று. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் திருவாராதனம் உற்சவம். திருநாகேஸ்வரம் ஸ்ரீ நாகநாதர் உற்சவம் ஆரம்பம். திருவாஞ்சியம் முருகப்பெருமான் உற்சவம். ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியாழ்வார் வாகனத்தில் புறப்பாடு. சிவபெருமானை வழிபட குடும்ப ஒற்றுமை மேம்படும்.
இன்றைய ராசிபலன்:
மேஷம் : சான்றோர்களின் சந்திப்பு கிட்டும் நாள், ஆர்வம் காட்டாத செயலில் கூட ஆதாயம் கிடைக்கும். உறவினர்களின் ஒத்துழைப்பால் மகிழ்ச்சியான சம்பவம் நடைபெறும். புதிய ஒப்பந்தங்கள் அடுக்கடுக்காக வந்துசேரும்.
ரிஷபம் : புதுமுயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். காரியத்திலேயே கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். வியாபார ரீதியான போட்டிகள் அகலும். விரயங்கள் உண்டு. பழைய கடன் தீர எடுக்கும் முயற்சி பலன் தரும்.
மிதுனம் : தாமதித்த காரியங்கள் தடையின்றி நடைபெறும் நாள். தொழில் சீராக நடைபெறும். சகோதர வழி சச்சரவுகளை சமாளிப்பீர்கள். பிறருக்கு பொறுப்பு சொல்லி வாங்கிக்கொடுத்த தொகை வந்துசேரும்.
கடகம் : உள்ளம் மகிழும் சம்பவம் இல்லத்தில் நடைபெறும் நாள். பணத் தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகம் சம்பந்தமாக தூரதேசத்திலிருந்து வரும் அழைப்புகளை ஏற்றுக்கொள்ளலாமா என்று சிந்திப்பீர்கள்.
சிம்மம் : செல்வந்தர்களின் ஒத்துழைப்பால் சிறப்படையும் நாள். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் உண்டு. அதிகாலையிலேயே ஆச்சரியமான தகவல் வந்துசேரும். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்பு உங்களை தேடி வரும்.
கன்னி : பாராட்டும். புகழும் கூடும் நாள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். கூடப்பிறந்தவர்கள் ஒத்துழைப்பு செய்வர். உத்தியோக மாற்றத்திற்கான அறிகுறி தோன்றும். உல்லாசப் பயணங்ளை மேற்கொள்வீர்கள்
துலாம் : திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடைபெறும் நாள். வருமானம் திருப்தி தரும். தொழிலில் இருந்த மந்த நிலை மாறும். நீண்ட நாட்களாக நிலவி வந்த குடும்ப பிரச்சினைக்கு முடிவெடுப்பீர்கள்.
விருச்சிகம் : உதிரி வருமானங்கள் வந்து உள்ளம் மகிழும் நாள். எதை செய்தாலும் தெளிவாக சிந்தித்து செய்வீர்கள். தொழில் முன்னேற்றப் பாதையில் செல்லும். வாங்கல், கொடுக்கல்களில் திருப்தி ஏற்படும். நந்தி வழிபாட்டால் நலம் காண வேண்டிய நாள்.
தனுசு : வெளிவட்டார பழக்கவழக்கம் விரிவடையும் நாள். கையில் கணிசமான தொகை வந்துசேரும். தொழிலில் புதிய முதலீடுகள் செய்ய முன்வருவீர்கள். உத்தியோகத்தில் இருந்த குறுக்கீடுகள் அகலும்.
மகரம் : மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். சகோதர சச்சரவுகள் அகலும். குழப்பங்கள் தீரும். செலவை குறைத்து சேமிப்பை உயர்த்துவீர்கள். உத்தியோகம் மற்றும் தொழிலில் இடமாற்றம் செய்யலாமா என்று சிந்திப்பீர்கள்.
கும்பம் : கடன் சுமை குறைய எடுத்த புதுமுயற்சி கைகூடும் நாள். பணம் எதிர்பார்த்த இடத்தில் இருந்து வந்து சேரும். செய்தொழிலில் மேன்மையுண்டு. நேற்று நடைபெறாத காரியம் ஒன்று நடைபெறும்.
மீனம் : யோசித்து செயல்பட வேண்டிய நாள். வரவு வருவதில் தாமதம் ஏற்படும். வியாபார விரோதம் உண்டு. எதிலும் அவசர முடிவெடுப்பதை தவிர்ப்பது நல்லது. பயணங்களை மாற்றியமைப்பீர்கள்.
சந்திராஷ்டமம்: பின்இரவு 5.59 வரை மீனம், பிறகு மேஷம்.