திருமலையில் வராக ஜெயந்தி விழா
மூலவர் பூவராக ஸ்வாமிக்கு பால், தயிர், தேன், இளநீர், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது.
ஆதிவராக ஷேத்திரத்தின் பிறப்பிடமான திருமலையில் பூவராக ஸ்வாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இங்கு ஆண்டுதோறும் வராக ஜெயந்தி விழா கொண்டாடப்படுவது வழக்கம்.
அவ்வகையில், இந்த ஆண்டுக்கான வராக ஜெயந்தி விழா நேற்று திருமலையில் கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக நேற்று காலை கோவிலில் கலச ஸ்தாபனம், கலச பூஜை, புண்ணியாகவாசனம் நடந்தது. அதன்பிறகு மூலவர் பூவராக ஸ்வாமிக்கு பால், தயிர், தேன், இளநீர், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
பூவராக ஸ்வாமி ஜெயந்தி விழாவில் திருப்பதி தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சவுத்ரி மற்றும் கோவில் அர்ச்சகர்கள், அதிகாரிகள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.