கபிலேஸ்வரர் கோவில் தெப்பத்திருவிழா- அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளிய காமாட்சி அம்மன்
ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு காமாட்சி அம்மனை தரிசனம் செய்தனர்.;
திருப்பதி:
திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் தெப்பத்திருவிழா விமரிசையாக நடைபெற்றது. நேற்று இரவு அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் காமாட்சியம்மன் எழுந்தருளி 7 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இந்நிகழ்வில் கோவில் துணை செயல் அதிகாரி தேவேந்திர பாபு, உதவி செயல் அதிகாரி சுப்பராஜு, சூப்பிரெண்டு சந்திரசேகர், கோவில் ஆய்வாளர் பாலகிருஷ்ணா மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு காமாட்சி அம்மனை தரிசனம் செய்தனர்.