விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்... சிறப்பு அலங்காரங்களில் காட்சி தந்த விநாயகர்

பல்வேறு கோவில்களில் பல்வேறு அலங்காரங்களில் விநாயக பெருமான் பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார்.

Update: 2024-09-07 10:13 GMT

சென்னை,

விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் தங்களது வீடுகளில் சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை வைத்து பூஜித்து வருகின்றனர். மேலும், புகழ்பெற்ற விநாயகர் கோவில்களில் விநாயகருக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டது. பல்வேறு மாலைகள், கரண்சி நோட்டுகள் மஞ்சள் உள்ளிட்டவற்றால் பக்தர்களுக்கு விநாயக பெருமான் காட்சி அளித்து வருகிறார்.

சென்னை,கொளத்தூர் பூம்புகார் நகரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து மக்கள் கட்சி சார்பில் 40 அடி உயர விநாயகர் சிலையை தாம்பூல தட்டு, காமாட்சி விளக்கு மற்றும் சங்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளதையும் பொதுமக்கள் அதனை வழிபடுவதையும் படத்தில் காணலாம்.

 

சென்னை, பெரவள்ளுர் பேப்பர் மில்ஸ் சாலையில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு 12 அடி உயரம் 30 அடி அகலம் கொண்ட 500 கிலோ விரலி மஞ்சளால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ மங்கள மூர்த்தி விநாயகரை படத்தில் காணலாம்.

அதேபோல, காஞ்சிபுரத்தில் உள்ள புகழ்பெற்ற விநாயகர் கோவிலில் கரன்சி நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட நிலையில் பக்தர்களுக்கு விநாயகர் காட்சி தந்து வருகிறார்.  

 

Tags:    

மேலும் செய்திகள்