இன்றைய முக்கிய நிகழ்வுகள், ராசிபலன்

வடபழனி, திருப்போரூர், கந்தகோட்டம், குன்றத்தூர், வல்லக்கோட்டை கோவில்களில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.

Update: 2024-01-02 06:12 GMT

இன்றைய பஞ்சாங்கம்

சோபகிருது ஆண்டு, மார்கழி-17 (செவ்வாய்க்கிழமை)

பிறை: தேய்பிறை

திதி: சஷ்டி மாலை 4.06 மணி வரை பிறகு சப்தமி

நட்சத்திரம்: பூரம் காலை 11.12 மணி வரை பிறகு உத்திரம்

யோகம்: சித்த, அமிர்தயோகம்

ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

சூலம்: வடக்கு

நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

முக்கிய நிகழ்வுகள்

சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். திருநெல்வேலி ஸ்ரீ வீரராகவபுரம் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு லட்சார்ச்சனை. இயற்பகை நாயனார் குருபூஜை. சங்கரன்கோவில் கோமதியம்மன் வெள்ளிப்பாவாடை தரிசனம். வடபழனி, திருப்போரூர், கந்தகோட்டம், குன்றத்தூர், வல்லக்கோட்டை கோவில்களில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.

இன்றைய ராசிபலன்

மேஷம்: கனவுகள் நனவாகும் நாள். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். அரசு வழியில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதற்கான அறிகுறிகள் தோன்றும்.

ரிஷபம்: வியக்கும் தகவல் வீடுவந்து சேரும் நாள். விட்டுப்போன வரன்கள் மீண்டும் வந்து சேரும். சொத்து சம்மந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். மாற்று மருத்துவத்தால் உடல்நலம் சீராகும்.

மிதுனம்: நம்பிக்கைகள் நடைபெறும் நாள். நல்லவர்களின் தொடர்பால் நலம் காண்பீர்கள். லட்சியப்பாதையை நோக்கி அடியெடுத்து வைக்க முன்வருவீர்கள். வீடு, இடம் வாங்கும் யோகம் உண்டு.

கடகம்: அடிப்படை வசதிகளை பெருக்கிக்கொள்ளும் நாள். நண்பர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கலாம். திருமணம் சம்மந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.

சிம்மம்: சிக்கனத்தை கடைப்பிடித்து சிறப்படையும் நாள். தேக ஆரோக்கியம் சீராகும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் வந்திணைவர். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் வந்துசேரும்.

கன்னி: பணியில் இருந்து வந்த தொய்வு அகலும் நாள். இல்லத்தில் இனிய சம்பவமொன்று நடைபெறும். சொன்ன சொல்லைக் காப்பாற்ற முன்வருவீர்க்ள. பிள்ளைகளால் பெருமை சேரும்.

துலாம்: அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். வெளிவட்டாரப் பழக்கம் விரிவடையும். குடும்பத்தினர்கள் உங்கள் கருத்துக்களுக்கு செவிசாய்ப்பர். வருமானம் எதிர்பார்த்தபடியே வந்து சேரலாம்.

விருச்சிகம்: பிள்ளைகளால் பெருமை சேரும் நாள். பிரச்சினைகள் படிப்படியாக மாறும். தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பூர்வீகச்சொத்து சம்மந்தமான பஞ்சாயத்துக்கள் நல்ல முடிவுக்கு வரும்.

தனுசு: உற்சாகம் உள்ளத்தில் குடிகொள்ளும் நாள். விலை மதிப்புமிக்க பொருளொன்றை வாங்கிச் சேர்க்க முன்வருவீர்கள். அரசியல் ஈடுபாடு கொண்டவர்களால் அனுகூலம் உண்டு.

மகரம்: சஞ்சலங்கள் அதிகரிக்கும் நாள். உதவி செய்வதாகச் சொன்னவர்கள் கடைசி நேரத்தில் கையை விரிக்கலாம். பயணங்களை மாற்றியமைப்பீர்கள். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் மீது குறை கூறுவர்.

கும்பம்: மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் ஏற்படும் நாள். எதிர்பாராத விரயம் உண்டு. தொழில் தொடர்பான பணிகளுக்கான அலைச்சல்களை பணிகளுக்காக சந்திக்க நேரிடும். பழைய கடன்களை கொடுத்து மகிழ்வீர்கள்.

மீனம்: எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். அந்நிய தேசத்து தொடர்பு அனுகூலம் தரும். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும்.

Tags:    

மேலும் செய்திகள்