ஆன்மிகத் துளிகள்

சுருக்கமாகச் சொன்னால் ‘நான்’ என்ற எண்ணமே எல்லாவற்றிற்கும் மூலம். அது உதிக்கும் இடம் இதயம்.

Update: 2017-01-31 01:00 GMT
இதயம்

சுருக்கமாகச் சொன்னால் ‘நான்’ என்ற எண்ணமே எல்லாவற்றிற்கும் மூலம். அது உதிக்கும் இடம் இதயம். இந்த இதயம் ரத்த சுத்திகரிப்புச் செய்யும் அங்கம் அல்ல. ‘ஹிருதயம்’ என்பதற்கு, இதுவே மையம் என்று பொருள். ஆகவே அது ஆன்மாவைக் குறிக்கிறது. பிரபஞ்சம் முழுவதும் உடலில் இருக்கும். உடல் முழுவதும் இதயத்தில் அடங்குகிறது.

–ரமணர்.

எண்ணம்

பிறர் சொல்வதிலும், அவர்கள் அபிப்பிராயங்களிலும் உன்னுடைய கவனத்தைச் செலுத்தாதே. அவை மிகவும் அபத்தமானவை. உன் இருக்கை, அதில் அடங்கியவை இவற்றையே இறைவன் உன்னிடம் இருந்து எதிர்பார்க்கிறார். இதற்குக் குறைந்ததும் இல்லை. அதிகமானதும் இல்லை. தெய்வ தரிசனம் பெற உள்ளத்தை தூய்மையாக வைத்துக்கொள்.

–ஸ்ரீஅன்னை.

உறுதி

வெற்றி பெறுவதற்கு நிறைந்த விடாமுயற்சியையும், பெரும் மன உறுதியையும் நீங்கள் கொண்டிருக்க வேண்டும். விடாமுயற்சி பெற்றவன், சமுத்திரத்தையே குடித்து விடுவேன்; எனது சங்கல்பத்தால் மலைகள் நொறுங்கி விழுந்தாக வேண்டும் என்று சொல்கிறான். அத்தகைய ஆற்றலை, அத்தகைய மன உறுதியை நீங்கள் பெற்றிருங்கள்.

–விவேகானந்தர்.

மேலும் செய்திகள்