முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை

முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை

Update: 2022-12-14 15:29 GMT

மணவாளக்குறிச்சி:

மணவாளக்குறிச்சி அருகே அம்மாண்டிவிளை பொட்டல்குழி பகுதியை சேர்ந்தவர் சிவாஜி கணேசன்(வயது 49). இவர் சொந்தமாக ஆட்ேடா வைத்து ஓட்டி வருகிறார். இவருக்கு திருமணம் முடிந்து மனைவி, பிள்ளைகள் உள்ளனர். சிவாஜி கணேசனின் தாயார் ஏற்கனவே இறந்து விட்டார். தந்தை இளையபெருமாள் சிவாஜி கணேசனுடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் மதியம் சிவாஜி கணேசன் சாப்பிடுவதற்கு வீட்டிற்கு சென்றார். அப்போது, அவரது தந்தை இளையபெருமாள் உடல்நிலை சரியில்லை என கூறியுள்ளார். அதற்கு சிவாஜி கணேசன் சவாரி முடிந்து வரும்போது மருந்து வாங்கி வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். மாலையில் சிவாஜி கணேசன் மகள் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தார். அப்போது இளையபெருமாள் வீட்டின் ஒரு அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அலறினார்.

இதையறிந்த சிவாஜி கணேசன், இதுகுறித்து மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் இளையபெருமாளின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்