விழுப்புரம் - திருப்பதி எக்ஸ்பிரஸ் ரெயில் பகுதி நேர ரத்து

விழுப்புரம் - திருப்பதி எக்ஸ்பிரஸ் ரெயில் பகுதி நேர ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

Update: 2024-06-30 03:22 GMT

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருப்பதியில் இருந்து நாளை (திங்கட்கிழமை) முதல் 31-ந்தேதி வரையில் காலை 6.50 மணிக்கு புறப்பட்டு காட்பாடி செல்லும் சிறப்பு மின்சார ரெயிலும் (மெமு எக்ஸ்பிரஸ்) (வண்டி எண்.07659), மறுமார்க்கமாக, காட்பாடியிலிருந்து அதே தேதிகளில் இரவு 9.15 மணிக்கு புறப்பட்டு திருப்பதி செல்லும் சிறப்பு மின்சார ரெயிலும் (07582) ரத்து செய்யப்படுகிறது.

இதேபோல, காட்பாடியிலிருந்து அதே தேதிகளில் காலை 9.30 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை செல்லும் சிறப்பு மின்சார ரெயிலும் (06417), மறுமார்க்கமாக, ஜோலார்பேட்டையிலிருந்து அதே தேதிகளில் மதியம் 12.45 மணிக்கு புறப்பட்டு காட்பாடி செல்லும் சிறப்பு மின்சார ரெயிலும் (06418) ரத்து செய்யப்படுகிறது.

மேலும், திருப்பதியிலிருந்து நாளை (திங்கட்கிழமை) முதல் 31-ந்தேதி வரையில் மதியம் 1.40 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16853) திருப்பதி - காட்பாடி இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக, விழுப்புரத்தில் இருந்து அதே தேதிகளில் காலை 5.35 மணிக்கு புறப்பட்டு திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16854) காட்பாடி - திருப்பதி இடையே பகுதி நேர ரத்துசெய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்