13 முறை குறுக்கிட்டும் ராகுல் காந்தி உரையின் வேகமும் வீரியமும் குறையவில்லை - சு.வெங்கடேசன்

மக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் ராகுல் காந்தி இன்று உரையாற்றினார்.

Update: 2024-07-01 16:41 GMT

புதுடெல்லி,

மக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இன்று உரையாற்றினார். எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்ற பிறகு மக்களவையில் ராகுல்காந்தி முதல் முறையாக பேசினார்.

இந்த நிலையில் பிரதமர், உள்துறை மந்திரி, ராணுவ மந்திரி உள்பட 8 மந்திரிகள் 13 முறை குறுக்கீடு செய்தும் ராகுல் காந்தி உரையின் வேகமும், வீரியமும் குறையவில்லை என்று சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

மக்களவையில் எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தியின் உரையை பிரதமர், உள்துறை மந்திரி, ராணுவ மந்திரி உள்பட எட்டு மந்திரிகள் 13 முறை குறுக்கீடு செய்தார்கள். ஆனாலும் அவரது உரையின் வேகமும், வீரியமும் குறையவில்லை. நேற்று போல் இந்தியா (INDIA) வென்ற இன்னொரு இறுதிச்சுற்று இன்று. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்