விழுப்புரம்: ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 13 பவுன் நகை திருட்டு

நகை திருட்டு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-12-22 23:12 GMT

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், மரக்காணம் ரோட்டை சேர்ந்தவர் செல்வராணி (வயது 62). இவர், நேற்று சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு, திண்டிவனத்தில் இருந்து ஒரு பஸ்சில் ஏறி சென்று கொண்டிருந்தார். அப்போது, அவர் கையில் வைத்திருந்த பையில் வளையல், செயின் என்று மொத்தம் 13 பவுன் நகைகளை வைத்திருந்தார்.

போரூர் சுங்கச்சாவடியில் பஸ்சில் இருந்து இறங்கி பையை, செல்வராணி பார்த்தார். அப்போது, அதில் நகைகள் இல்லை. மர்ம நபர்கள் அவரது நகைகளை அபேஸ் செய்து சென்று இருப்பது தெரியவந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த செல்வராணி, உடனடியாக திண்டிவனம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்