அழகு நிலையத்தில் விபசாரம்; குமரியை சேர்ந்த மேலாளர் கைது - 3 இளம்பெண்கள் மீட்பு

போலீசாரின் சோதனையில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் பெண்களை வைத்து விபசாரம் நடத்தியது தெரியவந்தது.;

Update:2024-06-30 09:51 IST

தூத்துக்குடி,

தூத்துக்குடி அழகு நிலையத்தில் 'ஸ்பா' என்ற பெயரில் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 3 இளம்பெண்கள் மீட்கப்பட்டனர். இதுதொடர்பாக குமரியை சேர்ந்த கடையின் மேலாளரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி கணேஷ்நகர் பகுதியில் பெண்களை வைத்து விபசாரம் நடத்துவதாக தென்பாகம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தகுமாரி தலைமையில் போலீசார் கணேஷ்நகருக்கு சென்றனர். அங்கு 'ஸ்பா' என்ற பெயரில் இயங்கி வரும் ஒரு அழகு நிலையத்துக்கு சென்று திடீர் சோதனை நடத்தினர். அங்கு மசாஜ் சென்டர் என்ற பெயரில் ஆண்களுக்கு பெண்களை வைத்து விபசாரம் நடத்தியது தெரியவந்தது.

இதையடுத்து விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட புதுச்சேரி, திருப்பூர், வேலூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 3 இளம்பெண்களை போலீசார் மீட்டு காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து அழகு நிலையத்தின் மேலாளரான கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் கொட்டில்பாடு பகுதியைச் சேர்ந்த சேவியர் ஷென்சிசிபு (வயது 35) என்பவரை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அழகு நிலைய உரிமையாளர் பால்ராஜ் (43) என்பவரை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்