'அரசாங்கத்தை விட ஓநாய்கள் புத்திசாலியாக இருக்கின்றன' - உத்தர பிரதேச மந்திரி பேச்சு
அரசாங்கத்தை விட ஓநாய்கள் புத்திசாலியாக இருப்பதால் அவற்றை பிடிப்பதில் தாமதம் ஏற்படுகிறது என உத்தர பிரதேச மந்திரி கூறியுள்ளார்.
லக்னோ,
உத்தர பிரதேச மாநிலம் பஹ்ரைக் மாவட்டத்தில் ஓநாய்களின் தாக்குதல் காரணமாக பொதுமக்கள் பெரிதும் அச்சமடைந்துள்ளனர். கடந்த சில மாதங்களில் அங்கு ஓநாய்கள் தாக்குதலால் 7 குழந்தைகள் உள்பட மொத்தம் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஓநாய்களை தேடிப் பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், அரசாங்கத்தை விட ஓநாய்கள் புத்திசாலியாக இருப்பதால் அவற்றை பிடிப்பதில் தாமதம் ஏற்படுவதாக உத்தர பிரதேச மந்திரி பேபி ராணி மவுரியா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஓநாய்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நாங்கள் அவற்றை விரைவில் கண்டுபிடிப்போம். ஆனால் அரசாங்கத்தை விட ஓநாய்கள் புத்திசாலியாக இருப்பதால் அவற்றை பிடிப்பதில் தாமதம் ஏற்படுகிறது. ஓநாய்கள் அனைத்தும் விரைவில் பிடிபடும்" என்று தெரிவித்தார்.