ஜனாதிபதி திரவுபதி முர்மு மிலாது நபி வாழ்த்து

இறை போதனைகளை உள்வாங்கி அமைதியான சமுதாயத்தை கட்டியெழுப்ப தீர்மானிப்போம் என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.

Update: 2024-09-16 01:29 GMT

கோப்புப்படம் 

புதுடெல்லி,

மிலாடி நபி பண்டிகையையொட்டி ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "மிலாடி நபியாகக் கொண்டாடப்படும் முகமது நபியின் பிறந்தநாளில், நாட்டின் குடிமக்கள் அனைவருக்கும், குறிப்பாக நமது இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு எனது அன்பான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்பு மற்றும் சகோதரத்துவ உணர்வுகளை வலுப்படுத்த முகமது நபி நம்மை ஊக்கப்படுத்தினார். சமூகத்தில் சமத்துவம் மற்றும் நல்லிணக்கத்தின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். மற்றவர்களிடம் கருணை காட்டவும், மனிதகுலத்திற்கு சேவை செய்யவும் மக்களை ஊக்குவித்தார். புனித குரானின் இறை போதனைகளை உள்வாங்கி அமைதியான சமுதாயத்தை கட்டியெழுப்ப தீர்மானிப்போம்" என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்