ஆசிய விளையாட்டு - ஹாட்ரிக் தங்கம் வென்ற இந்தியா..பதக்க பட்டியலில் 4-வது இடம்


தினத்தந்தி 5 Oct 2023 6:38 AM IST (Updated: 5 Oct 2023 10:16 PM IST)
t-max-icont-min-icon

ஆசிய விளையாட்டு தொடரில் 21 தங்கம், 32 வெள்ளி, 33 வெண்கலம் என மொத்தம் 86 பதக்கங்களுடன் இந்தியா பதக்க பட்டியலில் 4ம் இடத்தில் உள்ளது.


Live Updates

  • 5 Oct 2023 8:14 PM IST

    ஆசிய விளையாட்டு போட்டி பேட்மிண்டன்: சாத்விக்-சிராக் ஜோடி அரையிறுதிக்கு தகுதி

    இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி ஆசிய விளையாட்டு பேட்மிண்டன் ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதியில் சிங்கப்பூரின் என்ஜி ஜூ ஜி/ஜோஹான் பிரஜோகோவை 21-7, 21-9 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை உறுதி செய்தது.

    நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறும் அரையிறுதியில் சாத்விக்-சிராக் ஜோடி மலேசியாவின் ஆரோன் சியா/சூ வூய் யிக்கை எதிர்கொள்கிறார்கள்.


  • 5 Oct 2023 4:46 PM IST

    பெண்கள் மல்யுத்தம்: 53 கிலோ எடைப்பிரிவில் வெண்கலம் வென்றார் இந்தியாவின் ஆண்டிம் பங்கல் ..!!

    ஆசிய விளையாட்டு போட்டியில் பெண்களுக்கான மல்யுத்தப்போட்டியின் 53 கிலோ எடை பிரிவில் மங்கோலியாவின் பேட்-ஒசிரின் போலோர்டுயாவை 3-1 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி இந்தியாவின் ஆன்டிம் பங்கால் வெண்கலம் வென்று அசத்தினார். 



  • 5 Oct 2023 4:25 PM IST

    ஸ்குவாஷ் ஆண்கள் பிரிவு: வெள்ளி வென்றார் இந்திய வீரர் சவுரவ் கோசல்

    ஆண்களுக்கான ஸ்குவாஷ் இறுதிப் போட்டியில் சவுரவ் கோசல் 1-3 என்ற கணக்கில் ஈன் யோவ் என்ஜியிடம் தோற்றார்.

    இதன்படி ஸ்குவாஷ் ஆண்கள் பிரிவு இறுதிப் போட்டியில் மலேசியாவின் ஈன் யோவ் என்ஜி 1-3 என்ற புள்ளிக்கணக்கில் இந்திய வீரர் சவுரவ் கோசலை வீழ்த்தினார்.

    முன்னதாக இந்தியாவின் தீபிகா பல்லிக்கல்/ ஹரிந்தர் பால் சிங் ஜோடி, மலேசியாவின் அய்பா பிண்டி அஸ்மான்/ முகம்மது சியாபிக் பின் முகத் கமல் ஜோடியை 8-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.


  • 5 Oct 2023 3:38 PM IST

    கிரேக்க-ரோமன் மல்யுத்தம்: வெண்கலப் பதக்கப் போட்டியில் இந்தியாவின் நவீன் தோல்வி

    கிரேக்க-ரோமன் மல்யுத்தப்போட்டியின் 130 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் நவீன் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் தோல்வியடைந்தார். இவரை எதிர்த்து போட்டியிட்ட கொரியாவின் கிம் மின்சோக் ஐந்து புள்ளிகளை பெற்று வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

  • 5 Oct 2023 3:24 PM IST

    ஆசிய விளையாட்டு பெண்கள் ஆக்கி: சீன அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வி

    இன்று நடைபெற்ற பெண்கள் ஆக்கி போட்டியில் சீன அணிக்கு எதிரான போட்டியில் 4-0 என்ற கணக்கில் இந்திய அணி தோல்வியைத் தழுவியது.

    இந்த வெற்றியின் மூலம் சீனா பெண்கள் ஆக்கி அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    இன்று நடைபெறும் மற்றொரு அரையிறுதிப் போட்டியில் தென்கொரியா- ஜப்பான் அணிகள் மோத உள்ளன. இதில் தோல்வியடையும் அணி நாளை நடைபெறும் வெண்கலப் பதக்கத்திற்காக போட்டியில் இந்திய அணியுடன் மோதுகிறது. 

  • 5 Oct 2023 2:51 PM IST

    கபடி: ஜப்பான் அணியை வீழ்த்தி குருப் -ஏ பிரிவில் முதலிடம் பிடித்தது இந்திய ஆண்கள் அணி

    இன்று நடைபெற்ற போட்டியில் ஜப்பான் அணியை 56-30 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி குருப் -ஏ பிரிவில் இந்திய ஆண்கள் அணி முதலிடம் பிடித்தது.

    நாளை நடைபெறும் அரையிறுதியில், குரூப் பி பிரிவில் இரண்டாவது இடத்தைப் பிடித்த பாகிஸ்தானுடன் இந்தியா அணி மோத உள்ளது. 

  • 5 Oct 2023 2:32 PM IST

    ஆண்களுக்கான காம்பவுண்டு வில்வித்தை

    வில்வித்தை ஆண்கள் காம்பவுண்டு பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் பிரவீன் ஓஜஸ், அபிஷேக் வர்மா மற்றும் பிரதமேஷ் ஜவகர் ஆகியோர் அடங்கிய அணி தென்கொரியாவை 235-230 என்ற புள்ளிக்கணக்கில் தோற்கடித்து தங்கப்பதக்கம் வென்றது.



  • 5 Oct 2023 2:01 PM IST


    வில்வித்தை ஆண்கள் காம்பவுண்டு பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் பிரவீன் ஓஜஸ், அபிஷேக் வர்மா மற்றும் பிரதமேஷ் ஜவகர் ஆகியோர் அடங்கிய அணி சீன தைபே அணியுடன் மோதியது. இதில் இந்திய அணி 234-224 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இறுதிப்போட்டியில் தென்கொரியா அணியை இந்திய அணி எதிர்கொள்கிறது.

  • 5 Oct 2023 12:18 PM IST


    ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் மலேசிய அணியை வீழ்த்தி இந்தியா தங்கம் வென்றுள்ளது. இந்தியாவின் தீபிகா பல்லிக்கல்/ ஹரிந்தர் பால் சிங் ஜோடி, மலேசியாவின் அய்ஃபா பிண்டி அஸ்மான்/ முகம்மது சியாஃபிக் பின் முகத் கமல் ஜோடியை 8-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றது. ஆசிய விளையாட்டு தொடரில் இந்தியா வென்றுள்ள  20-வது தங்கம் இதுவாகும்.

  • 5 Oct 2023 10:41 AM IST

    மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ ப்ரீ ஸ்டைல் பிரிவு அரையிறுதி  போட்டியில் இந்தியாவின் பூஜா கெலாட் 0-10 என்ற கணக்கில் ஜப்பான் வீராங்கனையிடம் தோல்வி அடைந்தார்.



Next Story