நாடாளுமன்ற தேர்தல்-2024
நாளை கூடுகிறது மத்திய அமைச்சரவை கூட்டம்
மத்தியில் ஆட்சி அமைக்க கூட்டணி கட்சிகளை பா.ஜனதா நம்பி இருக்கும் சூழலில் நாளை ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
4 Jun 2024 9:41 PM ISTபா.ஜ.க. மீது மக்கள் நம்பிக்கை வைத்ததற்காக நன்றி தெரிவிக்கின்றேன்: பிரதமர் மோடி
நாடாளுமன்ற தேர்தலில் கிடைத்துள்ள வெற்றி 140 கோடி மக்களுக்கான வெற்றி என்று பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார்.
4 Jun 2024 9:30 PM IST'உத்தர பிரதேச மக்கள் விவேகத்துடன் செயல்பட்டுள்ளனர்' - பிரியங்கா காந்தி
உத்தர பிரதேச மாநில மக்கள் மிகவும் விவேகத்துடன் செயல்பட்டுள்ளனர் என்று பிரியங்கா காந்தி தெரிவித்தார்.
4 Jun 2024 9:23 PM ISTநாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வோம்: பிரதமர் மோடி
நாட்டில் கடந்த 10 ஆண்டுகளாக செய்த மக்கள் பணிகளை தொடர்ந்து செய்து, மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வோம் என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.
4 Jun 2024 8:51 PM ISTஅமேதி தொகுதியில் ஸ்மிரிதி இரானியை தோற்கடித்தார் காங்கிரஸ் வேட்பாளர் கே.எல்.சர்மா
அமேதி தொகுதியில் ஸ்மிரிதி இரானியை தோற்கடித்து காங்கிரஸ் வேட்பாளர் கே.எல்.சர்மா வெற்றி பெற்றார்.
4 Jun 2024 8:46 PM ISTதூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி: 3.92 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் கனிமொழி வெற்றி
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி 3.92 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.
4 Jun 2024 8:29 PM ISTரே பரேலி, வயநாடு தொகுதிகளில் ராகுல் காந்தி அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி
2019-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில், வயநாடு தொகுதியில் அதிக வாக்குகளை பெற்று ராகுல் காந்தி வெற்றி பெற்றார்.
4 Jun 2024 8:20 PM ISTவரலாற்று வெற்றி - பிரதமர் மோடி நன்றி
மக்கள் தொடர்ந்து 3-வது முறையாக தேசிய ஜனநாயக கூட்டணி மீது நம்பிக்கை வைத்துள்ளனர் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
4 Jun 2024 8:12 PM IST'இந்தியா' வென்றுவிட்டது; மோடி தோற்றுவிட்டார் - மம்தா பானர்ஜி
மக்களவை தேர்தலில் 'இந்தியா' வென்றுவிட்டது என்றும், மோடி தோற்றுவிட்டார் என்றும் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
4 Jun 2024 8:02 PM ISTகடலூர் தொகுதி: காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் வெற்றி
கடலூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் 1.85 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.
4 Jun 2024 7:46 PM ISTதி.மு.க. கூட்டணி 40-க்கு 40 என்ற அளவில் அமோக வெற்றி: மு.க. ஸ்டாலின் பெருமிதம்
2019 மக்களவை தேர்தலில், 39 தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில், இந்த முறை 40 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறோம் என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
4 Jun 2024 7:26 PM ISTஅயோத்தியில் பா.ஜ.க.வுக்கு பின்னடைவு.. வெற்றியை நெருங்கும் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர்
அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டதையடுத்து, இது தேசிய அளவில் பா.ஜ.க.வின் வெற்றிக்கு உதவியாக இருக்கும் என பேசப்பட்டது.
4 Jun 2024 7:18 PM IST