தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி: 3.92 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் கனிமொழி வெற்றி


தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி: 3.92 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் கனிமொழி வெற்றி
x

கோப்புப்படம்

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி 3.92 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.

தூத்துக்குடி,

தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என 40 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 19-ந் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது.

இதில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. ஆகிய கட்சிகள் கூட்டணியிட்டும், நாம் தமிழர் கட்சி தனித்தும் களம் கண்டது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.தற்போதைய நிலவரப்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி: 3.92 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் கனிமொழி வெற்றிபெற்றுள்ளார்.

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி மொத்த வாக்கு எண்ணிக்கை:-

கனிமொழி (திமுக) - 5,40,729

சிவசாமி வேலுமணி (அதிமுக) - 1,47,991

விஜயசீலன் (பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ்) - 1,22,380

டாக்டர் ரொவினா ரூத் ஜேன் (நாம் தமிழர்) - 1,20,300


Next Story