28-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 28 Dec 2024 8:44 PM IST
கட்சி பாகுபாடின்றி நினைவஞ்சலியில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி - தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா
விஜயகாந்த் குருபூஜை விழாவுக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், “மக்களுக்காக வாழ்ந்தவர் விஜயகாந்த், இன்னும் அவர் மக்களுக்காகவே இருக்கிறார். என்றும் விஜயகாந்துக்கு விசுவாசமாக இருப்போம். கட்சி பாகுபாடின்றி நினைவஞ்சலியில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி. விஜயகாந்த் குருபூஜை நிகழ்வுக்கு ஒத்துழைப்பு தந்த காவல் துறைக்கு நன்றி” என்று அவர் கூறினார்.
- 28 Dec 2024 7:45 PM IST
ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு அறிவிப்பு
2025-ஆம் ஆண்டு தைப்பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்குத் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு வழங்கிட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
- 28 Dec 2024 7:07 PM IST
மன்மோகன் சிங் நினைவிடம்: மத்திய அரசுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
மன்மோகன் சிங்கின் தலைமை இந்தியாவின் பொருளாதாரத்தை மாற்றியது மற்றும் மில்லியன் கணக்கானவர்களை வறுமையிலிருந்து மீட்டது. ஒரு அரசியல்வாதியை அவமரியாதை செய்வது இந்தியாவின் முன்னேற்றத்தையே அவமதிப்பதாகும். தலைசிறந்த தலைவர்களை இழிவுபடுத்திய கறை வரலாற்றில் இருந்து மறையாது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
- 28 Dec 2024 7:04 PM IST
எப்.ஐ.ஆர். வெளியானதற்கு தொழில்நுட்பக் கோளாறே காரணம் - அமைச்சர் ரகுபதி விளக்கம்
செய்தியாளர்களிடம் பேசிய சட்டத் துறை அமைச்சர் ரகுபதி , “அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் எப்.ஐ.ஆர். வெளியானதற்கு தொழில்நுட்பக் கோளாறே காரணம்
இணைய வழியில் நிர்வகிக்கும் சி.சி.டி.என்.எஸ் (CCTNS) அமைப்பின் தொழில்நுட்பக் கோளாறே காரணம். காவல்துறை காரணம் இல்லை. அண்ணா பல்கலை. விவகாரத்தில் கோர்ட்டு உத்தரவுப்படி சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்படும். சம்பவம் தொடர்பாக விசாரணை தொடர்ந்து மேற்கொள்ளப்படும்” என்று அவர் கூறினார்.
இந்த வழக்கு பற்றிய சென்னை காவல்துறை ஆணையரின் பேட்டி பற்றி தெரிவிக்கப்பட்ட கருத்துக்களைப் பொறுத்தவரை, அகில இந்திய பணிகள் (நடத்தை) விதிகள் 1968-ன்படி கடைபிடிக்கப்படும் நடைமுறைகளின் அடிப்படையில் எந்த தவறும் இல்லை’ என்று அவர் கூறினார்.
- 28 Dec 2024 6:16 PM IST
அன்புமணியுடன் மோதல் ஏற்பட்ட விவகாரம்: ராமதாசுடன் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை
பா.ம.க. இளைஞரணி தலைவர் நியமனம் தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே பொதுக்குழு கூட்டத்தில் கருத்து மோதல் ஏற்பட்ட நிலையில், ராமதாஸ் உடன் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி தைலாபுரத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாசுடன் முக்கிய நிர்வாகிகள் ஜி.கே.மணி, வன்னியர் சங்க தலைவர்அருள்மொழி உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
- 28 Dec 2024 5:36 PM IST
இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை..?
புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய 4 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
- 28 Dec 2024 5:24 PM IST
குடி குடியை கெடுக்கும் என்று டிவியில் அரசு விளம்பரம் செய்வதில் என்ன பயன் உள்ளது? என்று கேள்வி எழுப்பிய மதுரை கோர்ட்டு, இருக்கும் மதுக்கடைகளை குறைக்க வழிபாருங்கள், மூலைமுடுக்கெல்லாம் மதுக்கடைகள் உள்ளன. இதை அதிகரிப்பதால் என்ன பயன்?” என்று அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு மதுரைக் கிளை கேள்வி எழுப்பி உள்ளது.
- 28 Dec 2024 5:00 PM IST
தி.மு.க. ஆட்சி நீடிக்கக்கூடாது: 2026-ல் பா.ம.க. தலைமையில் கூட்டணி ஆட்சி: ராமதாஸ்
புதுச்சேரியில் நடைப்பெறும் வரும் பா.ம.க பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கூறுகையில், “தமிழகத்தில் இனி தி.மு.க. ஆட்சி நீடிக்கக்கூடாது. 2026-ல் தமிழகத்தில் பா.ம.க. தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும். மக்களுக்காக மக்களால் உருவாக்கப்பட்ட கட்சி பா.ம.க. தமிழகத்தில் எத்தனையோ கட்சிகள் இருந்தாலும் பா.ம.க.வுக்கு தனிச்சிறப்பு உள்ளது” என்று அவர் கூறினார்.
- 28 Dec 2024 4:26 PM IST
இந்த இக்கட்டான நேரத்தில், அவரது குடும்பத்தினர் மற்றும் இந்திய மக்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.