28-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 28 Dec 2024 3:26 PM IST
புத்தாண்டு கொண்டாட்டம்: வாகன ஓட்டிகளுக்கு கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை
புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது குடித்துவிட்டு வாகனம் ஓட்டினாலோ, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகன சாகசத்தில் ஈடுபட்டாலோ அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டாலோ அவர்கள் மீது வழக்கு பதிந்து வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- 28 Dec 2024 2:48 PM IST
பா.ம.க இளைஞர் அணி நிர்வாகி நியமனம் தொடர்பாக கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ்- அன்புமணி ராமதாஸ் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது. இதனால் அக்கட்சியினர் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
- 28 Dec 2024 2:45 PM IST
சென்னை காவல் ஆணையர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் - அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
பாதிக்கப்பட்ட மாணவியின் கண்ணியம் காக்கப்படவில்லை. மாணவியின் அடையாளத்தை எப்.ஐ.ஆரில் குறிப்பிட்டது சட்டப்படி தவறு. செய்தியாளர் சந்திப்பு நடத்த அரசிடம் சென்னை காவல் ஆணையர் அனுமதி பெறவில்லை. சென்னை காவல் ஆணையர் அருண் மீது அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
- 28 Dec 2024 2:18 PM IST
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக விசாரிக்க 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் குழுவை அமைத்தது சென்னை ஐகோர்ட்டு.