தேர்தல் முடிவுகள்.. அரியானாவில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி, ஜம்மு காஷ்மீரை காங். கூட்டணி கைப்பற்றியது


LIVE
தினத்தந்தி 8 Oct 2024 2:37 AM GMT (Updated: 8 Oct 2024 10:29 AM GMT)


Live Updates

  • 8 Oct 2024 10:29 AM GMT

    அரியானா தேர்தல் முடிவுகள்

    கட்சி வெற்றி முன்னிலை மொத்தம்
    பா.ஜ.க. 15 35 50
    காங்கிரஸ் 15 20 35
    இந்திய தேசிய லோக் தளம் 0 2 2
    சுயேட்சைகள் 2 1 3

  • 8 Oct 2024 10:06 AM GMT

    மீண்டும் காஷ்மீர் முதல்-மந்திரி ஆகிறார் உமர் அப்துல்லா

    ஜம்மு காஷ்மீரின் முதல்-மந்திரியாக உமர் அப்துல்லா பதவியேற்பார் என தேசிய மாநாட்டு கட்சித்தலைவர் பரூக் அப்துல்லா  தெரிவித்துள்ளார்.

  • 8 Oct 2024 10:02 AM GMT

    ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி

    ஜம்மு-காஷ்மீரில் காங்கிரஸ்-தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி ஆட்சியைப் பிடிக்கிறது. பிற்பகல் நிலவரப்படி தேசிய மாநாட்டுக் கட்சி 35 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 5 இடங்களில் வென்றுள்ளது. 6 தொகுதிகளில் தேசிய மாநாட்டுக் கட்சி முன்னிலையில் இருக்கிறது. பா.ஜ.க. 22 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

  • 8 Oct 2024 8:14 AM GMT

    ஜம்மு காஷ்மீர் - முன்னிலை நிலவரம்

    தேசிய மாநாட்டு கட்சி 41
    பா.ஜ.க. 29
    காங்கிரஸ் 6
    மக்கள் ஜனநாயக கட்சி 4
    ஜம்மு காஷ்மீர் மக்கள் மாநாட்டு கட்சி 1
    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 1
    ஆம் ஆத்மி கட்சி 1
    சுயேட்சை 7

  • 8 Oct 2024 8:10 AM GMT

    தேசிய மாநாட்டு கட்சியினர் கொண்டாட்டம்

    ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி அதிக இடங்களில் முன்னிலை பெற்று வெற்றியை நெருங்கி உள்ள நிலையில், அக்கட்சியின் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். ஸ்ரீநகரில் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லாவின் வீட்டிற்கு வெளியே தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

  • 8 Oct 2024 8:04 AM GMT

    அரியானாவில் நிலைமை மாறும்.. காங்கிரஸ் தலைவர் நம்பிக்கை

    அரியானாவில் தற்போதைய நிலவரப்படி பா.ஜ.க. 49 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. எனவே, மூன்றாவது முறையாக பா.ஜ.க. ஆட்சியமைக்கும் சூழல் உருவாகியிருக்கிறது.

    ஆனால் அடுத்தடுத்த சுற்று வாக்கு எண்ணிக்கையில், நிலைமை மாறும் என்றும், காங்கிரஸ் மெஜாரிட்டியை தாண்டும் என்றும் அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அமின் பட்டேல் நம்பிக்கை தெரிவித்தார். 

  • 8 Oct 2024 7:58 AM GMT

    அரியானாவில் ஹாட்ரிக் வெற்றியை நோக்கி பா.ஜ.க..

    அரியானாவில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் காங்கிரசுக்கு சாதகமாக இருந்தன. பெரும்பாலான கணிப்புகளில், இரண்டு முறை ஆட்சியமைத்த பா.ஜ.க. இந்த முறை ஆட்சியை இழக்கும் என்றும், காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தன.

    ஆனால், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி, பா.ஜ.க.வு.க்கு சாதகமான முடிவுகள் வந்துகொண்டிருக்கின்றன. ஆட்சியமைக்க 46 இடங்கள் தேவை என்ற நிலையில், தற்போதைய நிலவரப்படி பா.ஜ.க. 49 இடங்களில் முன்னிலையில் உள்ளது. ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. தற்போதைய சூழ்நிலையை வைத்து பார்க்கையில் ஹாட்ரிக் வெற்றியை நோக்கி பா.ஜ.க. பயணிக்கிறது. 

  • அரியானாவில் காங்கிரஸ் வேட்பாளர் வினேஷ் போகத் வெற்றி
    8 Oct 2024 7:54 AM GMT

    அரியானாவில் காங்கிரஸ் வேட்பாளர் வினேஷ் போகத் வெற்றி

    பாஜக வேட்பாளர் யோகேஷ் குமாரை வீழ்த்தி, மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் 5,909 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். 19 ஆண்டுகளுக்கு பிறகு அரியானாவின்  ஜுலானா தொகுதியில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. 

  • 8 Oct 2024 7:22 AM GMT

    அரியானா சட்டசபை தேர்தலில் ஹிசார் தொகுதியின் சுயேச்சை வேட்பாளர் சாவித்ரி ஜிண்டால் 5வது சுற்றில் 21,113 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ராம் நிவாஸ் 13,725 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார். இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 7,388 ஆகும்.

  • 8 Oct 2024 7:14 AM GMT

    அரியானா சட்டப்பேரவை தேர்தலில் ஜுலானா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் களம் இறங்கிய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் 11-வது சுற்றில் 50,617 வாக்குகள் பெற்று மீண்டும் முன்னிலையில் உள்ளார்.


Next Story